'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும்': மத்திய அரசு கணிப்பு!!

2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு கூறினாலும், இந்த சதவீதம் இன்னும் குறைவாகவே இருக்கும் என்று பெரும்பாலான தனியார் பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும்': மத்திய அரசு கணிப்பு!!

தேவைக்குறைவு எற்பட்டதால், தனது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி கடந்த மாதம் கூறியிருந்தது.

New Delhi:

வரும் மார்ச் மாதத்துடன் நிறைவு பெறும் 2019-20 -ம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக இருக்கும் என்று மத்திய அரசு மதிப்பிட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

மத்திய அரசு 5 சதவீத வளர்ச்சி இருக்கும் என்று கணித்திருந்தாலும், பெரும்பாலான தனியார் பொருளாதார வல்லுனர்கள், 5 சதவீதத்திற்கும் குறைவான வளர்ச்சியைத்தான் 2019 - 20 நிதியாண்டில் இந்தியா எட்டும் என்று கணித்துள்ளனர். 

கடந்த மாதம் தகவல் தெரிவித்திருந்த மத்திய ரிசர்வ் வங்கி, தேவைக் குறைவு ஏற்பட்டதாலும், சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை காணப்படுவதாலும் தனது வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்று கூறியிருந்தது. 

கடந்த ஜூலை மாதத்தின்போது இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது. முன்பு, இதை விட வளர்ச்சி சற்று அதிகமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுனர்கள் கணித்திருந்தனர். இது கடந்த 2013 மார்ச்சிலிருந்து ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வளர்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாடிக்கையாளர்களின் தேவை, தனியார் முதலீடுகள் குறைந்த போனது, சர்வதேச அளவில் காணப்படும் பொருளாதார மந்த நிலை ஆகியவை இந்தியாவின் ஏற்றுமதியை பாதித்துள்ளன. மேலும், இந்திய பொருளாதாரத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனால் வளர்ச்சி விகிதம் 5 சதவீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. 

தேவை குறைவு, பல்வேறு துறைகளில் ஆயிரக்கணக்கானோர் வேலை இழந்தது ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் நெருக்கடியான நிலையில் உள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com