31,000 ரூபாயைத் தொட்டது தங்கம் விலை

தங்கம் விலை இன்று 100 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது

31,000 ரூபாயைத் தொட்டது தங்கம் விலை

தங்கம் விலை இன்று 100 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. பண்டிகை காலத்தை முன்னிட்டு வியாபாரிகள் அதிகம் தங்கம் வாங்கி வருவதால், இந்த மாதத்திலேயே மிக அதிக அளவு உயர்ந்துள்ளது. வெள்ளி விலையும் 50 ரூபாய் அதிகரித்து , கிலோ 38,300 ரூபாயாக உயர்ந்தது. விலை உயர்வுக்கு பிறகு 99.9% தூய்மையான தங்கத்தின் விலை 31,000 ரூபாயும், 99.5% தூய்மையான தங்கம் 30,750 ரூபாயாகவும் உள்ளது.

தங்கம் விலை குறித்து தெரிந்து கொள்ள 5 தகவல்கள்:

1. பண்டிகை காலத்தை முன்னிட்டு வியாபாரிகள் அதிகம் தங்கம் வாங்கி வருவதால், தங்கம் விலை அதிகரித்துள்ளது.

2. உலக அளவில் தங்கம் விலை 0.07% குறைந்து சிங்கப்பூரில் 1,204 டாலர்களாக இருக்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பு சற்று உயர்ந்ததால் தங்கம் விலை குறைந்துள்ளது.

3. கடந்த இரண்டு நாட்களில் தங்கம் விலை 280 ரூபாய் அதிகரித்திருந்தது.

4. ஒரு பவுன் தங்க விலை உயராமல் 24,500 ரூபாயாகவே இருக்கிறது.

5. 100 எண்ணிக்கையிலான வெள்ளி காசுகளின் விலை 72,000 ரூபாயாக இருக்கிறது.