5 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது தங்கம் விலை

5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை 30,800 ரூபாய் (10 கிராம்) என்ற அளவுக்கு சரிவடைந்தது

5 மாதங்களில் இல்லாத அளவு குறைந்தது தங்கம் விலை

5 மாதங்களில் இல்லாத அளவு தங்கம் விலை 30,800 ரூபாய் (10 கிராம்) என்ற அளவுக்கு சரிவடைந்தது. தங்கத்துக்கான தேவை குறைந்ததே இதற்கான காரணம் என்கிறது பி.டி.ஐ செய்தி நிறுவனம்.

வெள்ளி 620 ரூபாய் குறைந்து, கிலோ 39,200 ரூபாயாக சரிவடைந்தது. உலக சந்தையில் கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர். 

இன்றைய தங்கம், வெள்ளி விலை பற்றி தெரிந்து கொள்ள 5 விஷயங்கள்

இன்று உலக சந்தையில், ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 1,227.78 டாலர்களாக பெரிய மாற்றம் இன்றி இருந்தது. ஆனால் நேற்றைய விலை 1% குறைந்து 1,225.58 டாலர்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில், 99.9% சுத்தமான மற்றும் 99.5% சுத்தமான தங்கத்தின் விலை 250 ரூபாய் குறைந்து, 30,800 மற்றும் 30,650 ரூபாயாக இருந்தது. இது கடந்த 3 மாதங்களில் இல்லாத அளவு குறைவு.

10 கிராம் தங்கத்தின் விலை 29,500 ரூபாய் வரை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய விலையில் வெள்ளி 620 ரூபாய் குறைந்து 39,200ரூபாயாக இருந்தது. இந்த வாரத்தை பொறுத்தவரை 690 ரூபாய் சரிந்து 38,290 ரூபாயக உள்ளது. 

வெள்ளி நாணயங்களின் விலை 74,000 ரூபாயாக உள்ளது