தொடர்ந்து தங்கம் விலை சரிவு!

10 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 31,400 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 250ரூபாய் குறைந்து 40,350 ரூபாயாக உள்ளது.

தொடர்ந்து தங்கம் விலை சரிவு!


வெளிநாட்டு சந்தையில் ஏற்பட்ட பலவீனம் காரணமாக, தொடர்ந்து தங்கத்தின் விலை குறைந்து வருகிறது.10 கிராம் தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து 31,400 ரூபாயாக உள்ளது. ஒரு கிலோ வெள்ளி 250ரூபாய் குறைந்து 40,350 ரூபாயாக உள்ளது.


தங்கம் வெள்ளியின் இன்றைய நிலவரத்தின் முக்கிய விவரங்கள் இதோ:
1. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவு, இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. சர்வதேச
சந்தையில், தங்கத்தின் மதிப்பு ஒரு அவுண்ஸிற்கு 1,249 டாலராக இருந்தது.கடந்த
வியாழக்கிழமை1,245 டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது
2. டில்லியில் இன்று, 99.9 % தங்கத்தின் விலை 20 ரூபாய் குறைந்து பத்து கிராம் 32,400
ரூபாயாகாவும், 99.5 % தங்கத்தின் பத்து கிராம் விலை 31,250 ரூபாயாகவும் இருந்தது
3. தங்கத்தின் விலை 230 ரூபாய் குறைந்துள்ளது. எனினும், ஒரு சவரன் தங்கம் 24,800 ரூபாயாக
உள்ளது
4. தங்கத்தை போன்று வெள்ளியின் ஒரு கிலோ விலையும் 250 ரூபாய் குறைந்து 40,350 ரூபாயாக
உள்ளது, வார அடிப்படையிலான வர்த்தகத்தில், ஒரு கிலோ வெள்ளியின் விலை 185 ரூபாய்
குறைந்து 39,040 ரூபாயாக உள்ளது
5. 100 வெள்ளி நாணயங்கள் வாங்கும் விலை 75,000 ரூபாயாகவும்,விற்கும் விலை 76,000
ரூபாயாகவும் உள்ளது.

(With Agency Inputs)