மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்தது: தெரிந்து கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்!

100 வெள்ளி காசுகள் 100 வாங்குவதற்கு 76,000 ரூபாயும், விற்பதற்கு 77,000 ரூபாயிலும் என்ற விலை இருக்கிறது.

மூன்றாவது நாளாக தங்கம் விலை குறைந்தது: தெரிந்து கொள்ளவேண்டிய 5 விஷயங்கள்!

புதுடில்லி: செவ்வாய்கிழமை அன்று தங்கத்தின் மதிப்பு 55 ரூபாய் குறைந்து, 10 கிராம் விலை 31,595 ஆக இருந்தது. வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் அதிகரித்து, 41,000 ரூபாயை எட்டியது.

பலவீனமான சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்காவில் அதிகரித்துள்ள வட்டி விகிதம், உள்ளூர் நகை வியாபாரிகளின் கோரிக்கை ஆகியவற்றால் தங்கத்தின் விலை குறைந்துள்ளது என பிடிஐ தெரிவித்தது. கடந்த திங்கட்கிழமை அன்று 10 கிராம் தங்கத்தின் விலை 32,650 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்களின் முக்கிய அம்சங்கள் இதோ:

  • சர்வதேச அளவில், தங்கத்தின் மதிப்பு 0.35 சதவிதம் குறைந்து, சிங்கப்பூரில் $1,260.70 அவுன்ஸாக உள்ளது
  • டில்லியில், தங்கத்தின் மதிப்பு 55 ரூபாய் குறைந்துள்ளது. 99.9% தூய்மையான தங்கம் 10 கிராம் 31,594 ரூபாயாகவும் மற்றும் 99.5% தூய்மையான தங்கத்தின் 10 கிராம் விலை 31,445 ரூபாயாகவும் உள்ளது
  • ஒரு சவரன் தங்கத்தின் விலை 24,800 ரூபாய்
  • வெள்ளியின் விலை ஒரு கிலோவிற்கு 100 ரூபாய் அதிகரித்து, 41,000 ரூபாயை எட்டியது.
  • வெள்ளி காசுகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லை.

100 வெள்ளி காசுகள் 100 வாங்குவதற்கு 76,000 ரூபாயும், விற்பதற்கு 77,000 ரூபாயிலும் என்ற விலை இருக்கிறது.