தொடர்ந்து 2-வது நாளாக தங்கம், வெள்ளி விலை உயர்வு : அறிய வேண்டிய 5 தகவல்கள்

தங்கம் சவரனுக்கு ரூ. 180-ம், வெள்ளி கிலோ ஒன்றுக்கு ரூ. 180-ம் அதிகரித்திருக்கிறது.

தொடர்ந்து 2-வது நாளாக தங்கம், வெள்ளி விலை உயர்வு : அறிய வேண்டிய 5 தகவல்கள்

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் தங்கம், வெள்ளியின் விலை உயர்ந்திருக்கிறது

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை தொடர்ந்து ஏற்றத்தை சந்தித்துள்ளன. தங்கம் விலை உயர்வுக்கு நீண்ட நாட்களாக வீழ்ச்சியில் இருந்து வரும் ரூபாயின் மதிப்பே காரணம் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். அதே நேரத்தில், அதிகளவு தங்கம் வாங்கப்பட்டு வருவதும் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. இந்த தகவலை ஆபரண வர்த்தகர்கள் தெரிவித்ததாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறியுள்ளது.

தங்கம் வெள்ளி விலை உயர்வு தொடர்பாக அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

  1. தங்கம் விலை சவரனுக்கு ரூ. 180 உயர்ந்து ரூ. 31,600-க்கு விற்பனையாகிறது. டெல்லியில் 99.99 சதவீத தங்கம் ரூ. 31,600-க்கும், 99.5 சதவீத தங்கம் ரூ. 31,450-க்கும் விற்பனையாகிறது.
  2. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு புதிய வரிகளை அமெரிக்கா விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், தங்கத்தின் விலை குறைந்திருந்தபோது அதனை மொத்தமாக வர்த்தகர்கள் சிலர் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  3. சர்வதேச சந்தையிலும் தங்கத்தின் விலை 0.2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  கடந்த வெள்ளியன்று 0.6 சதவீதம் வீழ்ந்திருந்த நிலையில் தற்போது விலை உயர்ந்திருக்கிறது.
  4. டாலரின் மதிப்பு வலுவாக இல்லாத நிலையிலும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்திருக்கிறது. இதனால் உள்ளூர் சந்தைக்கு பணத்தை விட தங்கம் கூடுதல் மதிப்பை அளிக்கிறது.
  5. வெள்ளியின் விலையும் கிலோ ஒன்றுக்கு ரூ. 180 உயர்ந்து ரூ. 37, 680-க்கு விற்பனையாகிறது.