3-வது நாளாக தங்கத்தின் விலை உயர்வு

தங்கம் சவரன் ஒன்றுக்கு ரூ. 10 அதிகரித்துள்ளது. நேற்று சவரன் ஒன்று தங்கம் ரூ. 180 அதிகரித்திருந்தது.

3-வது நாளாக தங்கத்தின் விலை உயர்வு

பண்டிகை கால தேவையால் தங்கத்தின் விலை உயர்கிறது

செவ்வாய்க் கிழமையான இன்று தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. பண்டிகை கால தேவை மற்றும் குறைந்து வரும் ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவை இதற்கு காரணமாகும். இதேபோன்று வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. சீன பொருட்களுக்கு 10 சதவீத கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விதித்துள்ளதால், தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

தங்கம், வெள்ளி இன்றைய நிலவரம் - 5 தகவல்கள்

1. பி.டி.ஐ. செய்தி நிறுவன தகவலின்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 31,610-க்கு விற்பனையாகிறது. டெல்லியில் 99.99 சதவீத தங்கம் ரூ. 31,160-க்கும், 99.95 சதவீத தங்கம் ரூ. 31,460-க்கும் விற்பனையாகிறது.

2. சீன பொருட்களுக்கு அமெரிக்கா விதித்த தடை காரணமாக தங்கத்தின் விலை சர்வதேச சந்தையில் குறைந்திருந்தது. ஆனால் டாலருக்கு நிகரா ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் தங்கத்தின் விலை மீண்டது.

3. உள்ளூர் வியாபாரிகளின் ஆர்வம் மற்றும் பண்டிகை கால தேவை ஆகியவற்றால் தங்கத்தின் விலை உயர்வில் உள்ளது.

4. நேற்றைய தினம் சவரன் ஒன்றுக்கு ரூ. 180 உயர்ந்து ரூ. 31,600-க்கு தங்கம் விற்பனையானது

5. வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 20 உயர்ந்து ரூ. 37,700-க்கு விற்பனையாகிறது. 100 வெள்ளிக்காசுகள் ரூ. 73,000-க்கு விற்பனையாகிறது.