இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்தது: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

மறுபுறம் வெள்ளி ரூ. 20 அதிகரித்து வெள்ளி கிலோ ரூ.39,120 ஆக விற்பனை செய்ப்படுகிறது.

இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை குறைந்தது: தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

தங்க நாணயம் 8 கிராமின் விலை ரூ26,400 ஆக உள்ளது.

இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை ரூ. 110 குறைந்துள்ளது. 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.33,060 ஆக உள்ளது. ஆல் இந்தியா சரஃபா அசோசியேசன் தகவலை மேற்கொள் காட்டி பிடிஐ செய்தி அமைப்பு தெரிவித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் சுத்தமான தங்கத்தின் தேவை குறைந்துள்ளதாக வணிகர்களின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மறுபுறம் வெள்ளி ரூ. 20 அதிகரித்து வெள்ளி கிலோ ரூ.39,120 ஆக விற்பனை செய்ப்படுகிறது. நாணய உற்பத்தியாளர்களின் தேவை அதிகரித்ததால் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. 

தங்கம், வெள்ளி விலை குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை 

1. தேசிய தலைநகரமான டெல்லியில் தங்கத்தின் விலை ரூ99.9 சதவீதம் மற்றும் 99.5 சதவீத சுத்தமான தங்கத்தின்  10 கிராம் தங்க கட்டியின் விலை ரூ.110 குறைந்து ரூ.33,060 ஆக உள்ளது. செவ்வாயன்று தங்கத்தின் விலை ரூ  50 குறைந்து 33,170 ரூபாயாக இருந்தது. 

2. உலகளாவிய சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ்சின் விலை 1,315.61  டாலராக உள்ளது. வெள்ளி ஒரு அவுன்ஸின் விலை 15.42 டாலராக உள்ளது. 

3. கமாடிட்டியில் எச்டிஎஃப்சி செக்யூரிட்டிஸ் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளர் தபான் பட்டேல், தங்கத்தின் விலை குறைவுக்கு அமெரிக்க தரவுகள் குறைந்ததுதான் காரணம் என்று தெரிவித்தார். 

4.தங்க நாணயம் 8 கிராமின் விலை ரூ26,400 ஆக உள்ளது. 

5. வெள்ளியின் விலை ரூ.20 ஆதாயமடைந்து கிலோ ரூ.39,120 ஆக உள்ளது.வாராந்திர அடிப்படையிலான விநியோகம் ரூ. 82  சரிந்து கிலோ ரூ.38,282 ஆக உள்ளது. வெள்ளி நாணயங்களை 80,000க்கு வாங்கி 81,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது.