சரசரவென உயர்ந்த தங்க விலை: இதுதான் காரணமா…?

“விலை உயர்வும் ரூபாயின் மதிப்பு சரிவினாலும் 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 40,652 ஆக உள்ளது”

சரசரவென உயர்ந்த தங்க விலை: இதுதான் காரணமா…?
New Delhi:

தங்கத்தின் விலை 10கிராமுக்கு ரூ.752 அதிகரித்துள்ளது. 10 கிராமின் மொத்த விலை ரூ. 40,652 ஆக உயர்ந்துள்ளது என்று ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் தெரிவித்துள்ளது. 

இதேபோல் வெள்ளி விலையும் முந்தைய வர்த்தகத்தில் ஒரு கிலோ ரூ. 47,910லிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.960 அதிகரித்து ரூ.48,870 ஆக இருந்தது. தங்கம் 10 கிராமுக்கு 39,900 ஆக மூடப்பட்டது. “விலை உயர்வும் ரூபாயின் மதிப்பு சரிவினாலும் 24 கேரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ. 40,652 ஆக உள்ளது” என்று ஹெச்.டி.எஃப்.சி செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் தேவர்ஷ் வாகில் தெரிவித்தார். 

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு ஏற்பட்ட முரண்பாடு ஆரம்பகட்ட வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு 24 பைசா குறைந்து ரூ. 71.62 ஆக இருந்தது. 

உலக சந்தையில், தங்கம் மற்றும் வெள்ளி இரண்டும் ஒரு நேர்மறையான போக்கை சித்தரித்தன. அவுன்ஸ் ஒன்றுக்கு 1,541 டாலர் மற்றும் வெள்ளி அவுன்ஸ் ஒன்றுக்கு 18.20 டாலர் என்ற லாபத்துடன் மேற்கோள் காட்டின.  

“அரசியல் பதற்றத்தில் சர்வதேச விகிதங்களில் தங்கத்தின் விலை கூடுதலாக உயர்த்தப்பட்டு வர்த்தகம் செய்யப்பட்டன”  

ஈரானில் புரட்சிகர காவலர்களின் தளபதியாக இருந்த ஜெனரல் காஸ்ஸெம் சுலைமணியை கொல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அனுமதியளித்தது என்று பெண்டகன் தெரிவித்த நிலையில் பதற்றம் அதிகரித்தது. 

மத்திய கிழக்கு நாடுகளில் உருவான பதட்டம் காரணமாக தங்கத்தின் விலை உயர்ந்துள்ளதாக நவ்னீத் தமானி தெரிவித்துள்ளார். 

Listen to the latest songs, only on JioSaavn.com