தங்கம், வெள்ளி விலை குறைந்தது - அறிய வேண்டிய தகவல்கள்

டெல்லியில் 99.99 சதவீத தங்கம் ரூ. 32,050-க்கும், 99.50 சதவீத தங்கம் ரூ. 31,900-க்கும் விற்பனையாகிறது.

தங்கம், வெள்ளி விலை குறைந்தது - அறிய வேண்டிய தகவல்கள்

8 கிராம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை

சந்தையில் இன்று தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 70 குறைந்து ரூ. 32,050-க்கு விற்பனையாகிறது. கடந்த 3 நாட்களாக விலை உயர்ந்திருந்த நிலையில் இன்றைக்கு சற்று விலைக்குறைப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு சர்வதேச காரணங்கள் இருப்பதாக பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தகவல் தெரிவிக்கிறது. இதேபோன்று வெள்ளியின் விலையிலும் மாற்றங்கள் நடந்துள்ளன.

விலை நிலவரம் குறித்த தகவல்கள்

1. அமெரிக்காவின் நியூயார்க் சந்தையில் தங்கத்தின் விலை 0.5 சதவீதம் குறைந்து அவுன்சு தங்கம் 1,218.50 டாலருக்கு விற்பனையாகிறது.
2. டெல்லியில் 99.99 சதவீத தங்கம் ரூ. 32,050-க்கும், 99.50 சதவீத தங்கம் ரூ. 31,900-க்கும் விற்பனையாகிறது.
3. கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக தங்கத்தின் விலை ரூ. 470 உயர்ந்திருந்த நிலையில் தற்போது விலைக்குறைப்பு ஏற்பட்டுள்ளது.
4. 8 கிராம் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
5. வெள்ளிக் காசுகளை பொருத்தவரையில், 100 காசுகள் ரூ. 76 ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

Listen to the latest songs, only on JioSaavn.com