ஹார்லிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை விற்க கிளாக்சோ திட்டம்

நெஸ்லே, பெப்சி கோ நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. 

ஹார்லிக்ஸ் தயாரிப்பு நிறுவனத்தை விற்க கிளாக்சோ திட்டம்

Shares of GlaxoSmithKline Consumer Healthcare have advanced nearly 9% in India trading this year.

ஹார்லிக்ஸ் தயாரிக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனமான கிளாக்சோ ஸ்மித் கிலைன், தனது இந்திய கிளையை விற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏலத் தொகையுடன் கூடிய விண்ணப்பத்தை செப்டம்பர் மாதத்துக்குள் அந்நிறுவனம் வரவேற்கிறதாகவும், தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் இருக்கும் இந்த நிறுவனத்தின் மதிப்பு 4.3 பில்லியன் டாலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த விற்பனை குறித்து சில நிறுவனங்களுக்கு மட்டும் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வாங்குவதற்கான விருப்பம் வரவேற்கப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளதாக, பெயர் செல்ல விரும்பாத சில தகவல்கள் கூறுகின்றன. நெஸ்லே, பெப்சி கோ நிறுவனங்கள் வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது. 

கிளாக்சோ நிறுவனத்துக்கு ஹார்லிக்ஸில் 72.5% பங்குகள் இருக்கின்றது. இவற்றை விற்பதன் மூலம் நோவார்டிஸ் ஏ.ஜி நிறுவனத்தின் பங்குகளை வாங்க கிளாக்சோ திட்டமிட்டுள்ளது. 13பில்லியன் டாலர்களுக்கு நோவார்டிஸ் பங்குகளை வாங்க கிளாக்சோ டீல் முடித்துள்ளது. 

இது பற்றி கிளாக்சோ மற்றும் நெஸ்லே நிறுவனத்திடம் கேட்டதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. கிளாக்சோ நிறுவனத்துக்கு தாக்காவில் இருக்கும் கிளாக்சோ ஸ்மித் கிளைன் பங்களாதேஷ் நிறுவன பங்குகளையும், மலோசியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் தங்கள் தயாரிப்புகளின் மார்க்கெட்டிங் உரிமத்தையும் விற்பது பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

uoj7s4us

 

இந்த ஆண்டு மட்டும் கிளாக்சோவின் சந்தை மதிப்பில் 9% அதிகரித்துள்ளது. இப்போது அதன் சந்தை மதிப்பு 29,900 கோடி ரூபாய். பூஸ்ட், குளிர்பானமான விவா,மால்டோவா ஆகியவையும் கிளாக்சோவின் தயாரிப்புகளே.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
More News