உ.பி-யில் 3,000 டன் தங்கம் இருப்பது உண்மையா..? - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

"அங்கு தங்கம் இருப்பது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில், பெரிய அளவு தங்கம் இருக்கலாம் என்று முடிவுகள் வரவில்லை."

உ.பி-யில் 3,000 டன் தங்கம் இருப்பது உண்மையா..? - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்!!

"சோன்பத்ராவின் சோன் பகாடி பகுதியில் சுமார் 52,806.25 டன் மதிப்பிலான தாதுப் பொருட்கள் இருக்கின்றன."

Kolkata, West Bengal/Sonbhadra, UP:

உத்தர பிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா மாவட்டத்தில் சுமார் 3,000 டன் அளவிலான தங்கம், மண்ணுக்கு அடியில் இருப்பதாக மாவட்ட சுரங்க அதிகாரி ஒருவர் தகவல் கொடுத்தார். அப்படி இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று தற்போது தெரிவித்துள்ளது இந்திய புவியியல் ஆய்வுத் துறை.

முன்னதாக சோன்பத்ரா மாவட்ட சுரங்க அதிகாரி, கே.கே.ராய், மாவட்டத்தில் உள்ள சோன் பகாடி மற்றும் ஹார்டி பகுதிகளில், முறையே 2,943.26 டன் மற்றும் 646.16 கிலோ மதிப்பிலான தங்கம் இருப்பதாக தெரிவித்தார்.  

இது இந்திய அளவில் பேசு பொருளானதைத் தொடர்ந்து, இந்திய புவியியல் ஆய்வுத் துறையின், இயக்குநர், எம்.ஸ்ரீதர், “அதைப் போன்ற எந்த தரவுகளையும் நாங்கள் கொடுக்கவில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் அப்படி தங்கம் இருப்பதாக நாங்கள் சொல்லவில்லை.

வடக்குப் பகுதியைச் சேர்ந்த இந்திய புயவியயல் துறை, சோன்பத்ரா பகுதியில் 1998-999 மற்றும் 1999-2000 ஆம் ஆண்டுகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன. அது குறித்து உத்தர பிரதேச அரசிடம் நாங்கள் தகவல்களைப் பகிர்ந்துள்ளோம்.

அங்கு தங்கம் இருப்பது தொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வில், பெரிய அளவு தங்கம் இருக்கலாம் என்று முடிவுகள் வரவில்லை.

சோன்பத்ராவின் சோன் பகாடி பகுதியில் சுமார் 52,806.25 டன் மதிப்பிலான தாதுப் பொருட்கள் இருக்கின்றன. அதில் ஒரு டன்னுக்கு சுமார் 3.03 கிராம் அளவிலான தங்கம் மட்டுமே இருக்கலாம் என்று கண்டறியப்பட்டது.

அந்த மொத்த தாதுப் பொருட்களில் இருந்து, 160 கிலோ தங்கம் மட்டுமே எடுக்க முடியும். 3,350 டன் அல்ல,” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 
 

Listen to the latest songs, only on JioSaavn.com