5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய சேவைத்துறை உதவும் : பியூஷ் கோயல்

மூன்று நாள் நிகழ்வை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், கர்நாடக அரசு,சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளன. 

5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய சேவைத்துறை உதவும் : பியூஷ் கோயல்

சேவைத்துறை அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 டிரில்லியன் டாலர் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது

Bengaluru:

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்திய அரசின் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைய சேவைத்துறை உதவக்கூடும் என்று தெரிவித்துள்ளார். 

சேவைத்துறை நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 டிரில்லியன் டாலன் பங்களிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று ரயில்வே, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.

 அரண்மனை மைதானத்தில் சேவைத்துறை தொடர்பான ஐந்தாவது உலகளாவிய கண்காட்சி திறப்பு விழாவில் இதைக் கூறினார். சேவைகள் இல்லாமல், உற்பத்தி வெற்றி பெற முடியாது. உற்பத்தி இல்லாமல் சேவைகள் வளர முடியாது என்பது போல இந்த இரண்டு துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடு அவுட்சோர்சிங்கை தாண்டி, செயற்கை நுண்ணறிவு, புதிய தொழில்நுட்பங்கள் ஆகியவற்றிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 

மூன்று நாள் நிகழ்வை வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகம், கர்நாடக அரசு,சேவைகள் ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளன. 

More News