12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் குறைந்தது

டெல்லியில் பெட்ரோல் விலை ரூ. 80-க்கும் குறைவாக வந்துள்ளது. மும்பையில் விலை ரூ. 85.24.

12-வது நாளாக பெட்ரோல், டீசல் விலை நாடு முழுவதும் குறைந்தது

மாற்றியமைக்கப்பட்ட புதிய விலைகள் நாள்தோறும் காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

நாடு முழுவதும் தொடர்ந்து 12-வது நாளாக பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ளது. குறைக்கப்பட்ட விலையானது இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. புதிய விலையின்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 79.75-க்கும், மும்பையில் ரூ. 85.24-க்கும், சென்னையில் ரூ. 82.86-க்கும், கொல்கத்தாவில் ரூ. 81.63-க்கும் விற்பனையாகிறது.

டீசலை பொறுத்தவரையில் டெல்லியில் லிட்டர் ஒன்று ரூ. 73.85-க்கும், மும்பையில் ரூ. 77.40-க்கும், சென்னையில் ரூ. 78.08-க்கும், கொல்கத்தாவில் ரூ. 75.70-க்கும் விற்பனையாகிறது.

8qchakg

2 வாரங்களுக்கு முன்பாக கடும் உயர்வில் இருந்த பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த 4-ம் தேதி மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையை தொடர்ந்து விலை குறையத் தொடங்கியது. மத்திய அரசு தரப்பில் ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று மாநில அரசுகள் வாட் வரியை குறைத்ததால் எரிபொருள் விலை குறைந்தது.

கடந்த 18-ம் தேதியில் இருந்து சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை குறைந்து வருகிறது. இதனால் எரிபொருள் விலையும் வீழ்ச்சியை சந்திக்கின்றன.

Listen to the latest songs, only on JioSaavn.com