வருமான வரியில் சலுகை பெற 5 வழிகள்

வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை

வருமான வரியில் சலுகை பெற 5 வழிகள்

இந்த ஆண்டுக்கான ( ஏப்ரல் 1, 2017 - மார்ச் 31,2018) வருமான வரி விவரத்தை தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ம் தேதி தான் கடைசி நாள். வருமான வரி செலுத்துவதில் இருந்து சில விதிகளின் கீழ் விலக்கு அளிக்கிறது வருமான வரித்துறை விதிகள். அவற்றை பயன்படுத்தி வருமான வரி செலுத்தும் அளவை எப்படி குறைப்பது என்பதை இங்கே காணலாம்.


விதி 80 சி:


80 சி விதியின் படி ஓராண்டுக்கு 1.5லட்சம் ரூபாய் வரை வருமான வரியில் சேமிக்கலாம். ஆயுள் காப்பீட்டு பிரீமியம் உள்ளிட்ட வருமான வரி விலக்கை அளிக்கும் திட்டங்களில் முதலீடு செய்வதன் மூலம், வரி செலுத்தும் தொகையை குறைக்கலாம். தனக்காகவோ, மனைவிக்காகவோ, குழந்தைகளுக்காகவோ ஆயுள் காப்பீடு செய்தால் வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதற்கும் சில விதிகள் உண்டு. இந்து பிரிக்கப்படாத குடும்பம் என்றால், குடும்பத்தில் இருக்கும் அனைவருக்கும் ஆயுள் காப்பீடு எடுக்கும் போது, வருமான வரி விலக்கு இருக்கிறது. 

தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீடு செய்திருந்தால் கூடுதலாக 50,000 ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம். அதாவது மொத்தம் 2 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.

இந்த முதலீடுகள ஒரு நபர் தன் பெயரில் செய்யாமல், தன் குடும்பத்தின் பெயரில் எடுத்திருந்தாலும் வரி விலக்கு கிடைக்கும். அதாவது, குடும்ப உறுப்பினர்கள் பெயரில் ஆயுள் காப்பீடு, பொது வைப்பு நிதி, ஆண்டுக்கு ஒரு முறை வருமானம் தரும் நிதி திட்டங்களில் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் முதலீடு செய்திருந்தால் வருமான வரியில் இருந்து சலுகை கிடைக்கும்.


பெண் குழந்தைகள் பெயரிலான முதலீடுகளுக்கு கிடைக்கும் வரி விலக்கு:


சுகன்யா சம்ரித்தி என்ற கணக்கில் பெண்குழந்தைகளின் பெயரில் பணம் செலுத்தினால், 80 சி விதியின் கீழ் வருமான வரியில் இருந்து விலக்கு கிடைக்கும். மேலும், இரண்டு குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தையும், வருமான வரி விலக்கு பெறுவதற்கான காரணமாக பயன்படுத்தலாம். 

வீடு அல்லது நிலம் வாங்கும் போது செலுத்தும் ஸ்டாம்ப் வரி மற்றும் பதிவுக் கட்டணம், தொழிலாளர் வைப்பு நிதி, 5 ஆண்டுகளுக்கு நிரந்திர வைப்பு நிதி கணக்கை பராமரித்தலும் வரி விலக்கு கிடைக்க வழிவகை செய்யும். 
 

வருமான வரி விலக்கு அளிக்கும் மேலும் சில முதலீடுகள் இங்கே

 

வருமான வரி விதிமுதலீட்டு திட்டங்கள்வரிச் சலுகை அளவு
80Dமருத்துவக் காப்பீடுஇவற்றில் குறைந்தபட்ச தொகை
அ)    அசல் தொகை; அல்லது
b)    50,000 - 1,00,000 (மூத்த குடிமக்களுக்கு கூடுதல் சலுகை)
80DDமாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ செலவு75,000 (1,25,000 மிகத் தீவிரமான இயலாமை)
80DDBமருத்துவ செலவுகளுக்கான வரிச் சலுகைஇவற்றில் குறைந்தபட்ச தொகை
அ)       அசல் தொகை; அல்லது
ஆ)       40,000 (1,00,000 மூத்த குடிமக்களுக்கு)
80Eகல்விக் கடன் வட்டிவட்டி தொகைக்கு வரிச் சலுகை
80EEவீட்டுக் கடன் வட்டிஇவற்றில் குறைந்தபட்ச தொகை:
a)      அசல் தொகை; அல்லது
b)     50,000
80GGவீட்டு வாடகைஇவற்றில் குறைந்தபட்ச தொகை
a)      மொத்த வருமானத்தில் 10 சதவிகிதத்துக்கும் அதிகாமக இருந்தால்; அல்லது
b)       25 சதவிகிதத்துக்கு அதிகமாக இருந்தால்;அல்லது
c)        Rs. 5,000 per month
80Uமாற்று திறனாளிகளுக்கான ஊக்கத் தொகை75,000 (1,25,000 தீவிர இயலாமைக்கு)
(Source: Taxmann)
விதிவருவாய்வரி சலுகை அளவு
80TTAசேமிப்பு கணக்கு வட்டிஇவற்றில் குறைந்தபட்சம்:
அ )                 அசல் வருவாய்;  அல்லது
ஆ)                 10,000
80TTBமூத்தக் குடிமக்களின் வங்கி டெபாசிட்களுக்கு கிடைக்கு வட்டிஇவற்றில் குறைந்த பட்சம்
அ)                 அசல் வருவாய்; அல்லது
ஆ)                 50,000
(Source: Taxmann)

வருவாய்க்கு கிடைக்கும் வரிச் சலுகைகள் மேலே உள்ளவை

வருமான வரி வரம்புவரி விகிதம்
பொது மக்கள்மூத்த குடிமக்கள்
(60-80 years)
மிகவும் மூத்த குடிமக்கள்
(80 years and above)
ரூ 2,50,000 வரைரூ 3,00,000 வரைரூ 5,00,000 வரை-
ரூ. 2,50,000 முதல் ரூ. 5,00,000 ரூ.3,00,000 - ரூ. 5,00,000-5%
ரூ. 5,00,000 - ரூ. 10,00,000ரூ. 5,00,000 - ரூ. 10,00,000ரூ. 5,00,000 - ரூ. 10,00,00020%
ரூ.10,00,000க்கு மேல்ரூ. 10,00,000க்கு மேல்ரூ .10,00,000க்கு மேல்30%

 

Listen to the latest songs, only on JioSaavn.com