Profit

ஐஎல்&எஃப்எஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் ரமேஷ் பவா கைது

ஐஎல்&எஃப் எஸ் வாரியம் மொத்த கடன் ரூ. 18,800 கோடியில் வெளி நிறுவனங்கள் மற்றும் இதன் குரூப் நிறுவனங்களின் கடன் ரூ. 10,700 கோடியாக உள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
ஐஎல்&எஃப்எஸ்  முன்னாள் நிர்வாக இயக்குநர் ரமேஷ் பவா கைது

ரமேஷ் பவா நிறுவனச்சட்டம் பிரிவு447 கீழ் கைது செய்யப்பட்டார்


ஐஎல்&எஃப் எஸ் நிதி சேவைகள் முன்னாள் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ரமேஷ் பவாவை தீவிர மோசடி புலனாய்வு ஆணையம் அவரை கைது செய்துள்ளது. உச்ச நீதிமன்றம் அவரின் கைதை தடை செய்ய கொடுக்கப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது. 

நிறுவனச் சட்டத்தின் 447 பிரிவின் கீழ் பவா கைது செய்யப்பட்டுள்ளார். கார்ப்ரேட் விவகார அமைச்சகத்தின் விசாரணை கமிஷன்  மோசடி விவகாரத்தில் இவரை கைது செய்துள்ளது.இந்த மாத தொடக்கத்தில் தீவிர மோசடி புலனாய்வு ஆணையம் முன்னால் தலைவர் ஹரி சங்கரனை மோசடி குற்றத்திற்காக  கைது செய்திருந்தது.

கடந்த ஆண்டு முதல் ஐஎல்& எஃப்எஸ் தொடர்ச்சியான கடன் விவகாரத்தில் சிக்கியுள்ளது. இது நாட்டின் நிழல் வங்கித் துறைப் பற்றிய மோசடியை கோடிட்டுக் காட்டுகிறது. நிறுவனம் கடுமையான நிதியியல் சிக்கியிருந்த நிலையில் பவா 2018 செப்டம்பர் மாதம் தன்னுடைய பதவியை விட்டு விலகினார். 

முன்னாள் தலைவர் ஹரி சங்கரன் தன்னுடைய அதிகாரங்களை தவறாக மோசடி செய்யும் விதத்தில் கடனை திருப்பி செலுத்தும் நிதியியல் தகுதியில்லா நிறுவனங்களுக்கு கடன்களை வழங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டதாக அரசாங்க அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐஎல்&எஃப் எஸ் வாரியம் மொத்த கடன் ரூ. 18,800 கோடியில் வெளி நிறுவனங்கள் மற்றும் இதன் குரூப் நிறுவனங்களின் கடன் ரூ. 10,700 கோடியாக உள்ளது.

ஐஎல்&எஃப் எஸ் கூறப்பட்ட நிதி முறைகள் கடந்த ஆண்டு வெளிவந்தன. சில குழு நிறுவனங்கள் கடன் திருப்பி செலுத்துவதை தவறவிட்டன.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top