வருமான வரி தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதாரை பயன்படுத்தலாம்: நிர்மலா சீதாராமன்

இதுவரை வருமான வரி தாக்கலுக்கு பான் கார்டு கட்டாயமாக இருந்து வந்தது.

பான் மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமானது.

New Delhi:

வருமான வரி தாக்கல் செய்ய பான் கார்டுக்குப் பதிலாக, ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

புதிதாக வருமான வரி தாக்கல் செய்ய உள்ளவர்கள், ஆதார் வைத்திருந்து, பான் இல்லாமல் இருப்பவர்களுக்கு இந்த புதிய விதிமுறை பயனளிக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். 

நாட்டில் 120 கோடிக்கும் அதிகமானவர்களிடம் ஆதார் கார்டு உள்ளது. இதன் வருமான வரி தாக்கல் செய்பவர்கள் எளிதாக வரி தாக்கல் செய்யும் வகையில் பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு பயன்படுத்திக் கொள்ளலாம். பான் இல்லாதவர்கள் வெறும் ஆதார் எண்ணை மட்டும் வைத்தே, வரி தாக்கல் செய்யலாம். 

வருமான வரி தாக்கலுக்கு, பான் என்பது கட்டாயமாக இருந்தது. எனினும், ஆதார் கார்டு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர், இதற்காக பான் மற்றும் ஆதாரை இணைப்பது கட்டாயமானது.  

நிதி அல்லாத நோக்கங்களுக்காக ஆதார் கட்டாயமாக்க முடியாது என்று தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் கூட, வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் - பான் இணைப்பு தேவைப்படும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.