4.7% ஜிடிபி வளர்ச்சி பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது: சொல்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா!

கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சி, 5.6 சதவிகிதமாக இருந்தது.

4.7% ஜிடிபி வளர்ச்சி பொருளாதார ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது: சொல்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா!

ற்போதைய காலாண்டில் அது 4.7 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

ஹைலைட்ஸ்

  • நடப்பு நிதி ஆண்டின் 3வது காலாண்டிற்கான ஜிடிபி விகிதம் வெளியிடப்பட்டது
  • அதன்படி, 4.7% ஜிடிபி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
  • இது முந்தைய நிதி ஆண்டின் 3வது காலாண்டைவிட குறைவு
New Delhi:

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டின் ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை வெளியிட்டிருந்தது மத்திய அரசு தரப்பு. இந்த மூன்றாவது காலாண்டில் ஜிடிபி வளர்ச்சியானது, 4.7 சதவிகிதம் இருப்பதாக கனக்கப்பட்டிருந்தது. அது குறித்துப் பேசியுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், “4.7 சதவிகித ஜிடிபி வளர்ச்சி இந்தியப் பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மையைக் காட்டுகிறது. இது ஒரு நல்ல குறியீடு,” என்று கருத்து தெரிவித்துள்ளார். 

தனியார் டிவி சேனல் ஒன்றில் விருது வழங்கும் விழாவில் பேசிய அமைச்சர் நிர்மலா, “பொருளாதார வளர்ச்சி திடீரென்று அதிகரிக்கும் என்றோ, குறையும் என்றோ நான் பார்க்கவில்லை,” என்று கூறினார். 

கடந்த நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபி வளர்ச்சி, 5.6 சதவிகிதமாக இருந்தது. தற்போதைய காலாண்டில் அது 4.7 சதவிகிதமாக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது உலக பொருளாதாரத்தில் மிகப் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, இந்தியப் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது குறித்து அமைச்சர் நிர்மலா, “உடனடியாக இந்த விவகாரம் குறித்துப் பதற்றமடைய வேண்டாம். அதே நேரத்தில் கொரோனா அச்சுறுத்தல் அடுத்த 2 அல்லது 3 வாரங்களுக்குத் தொடர்ந்தால் நிலைமை சிக்கலாகும்,” என்றார். மருத்து உற்பத்தி மற்றும் மின்னணு சாதனப் பொருட்கள் துறைகள், சீனாவிலிருந்து இறக்குமதியாகும் மூலப் பொருட்களை நம்பித்தான் இருக்கின்றன. கொரோனா பாதிப்பு மேலும் அதிகரித்தால் இந்தத் துறைகள் பாதிக்கப்பட்டு, அது பொருளாதாரத்தில் எதிரொலிக்கலாம். 

இது குறித்துப் பேசிய சீதாராமன், “மருந்து உற்பத்தி மற்றும் மின்னணுத் துறைகள் சீனாவிலிருந்து, மூலப் பொருட்களை வான்வழியாக எடுத்து வரச் சிபாரிசு செய்துள்ளன. அது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கும்,” என்றார்.

இறுதியாக வங்கித் துறை பற்றிப் பேசிய அமைச்சர், “நாட்டில் உள்ள வங்கிகளை நாங்கள் அதிக கடன் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி வருகிறோம். சில்லறை வர்த்தகம், கட்டுமானத் துறை மற்றும் வேளாண் துறைகளில் அதிக கடன் கொடுக்கச் சொல்லி வருகிறோம்.” என முடித்தார்.