பிளிப்கார்ட் தலைமை நிர்வாக அதிகாரி பின்னி பன்சால் ராஜினாமா!

பிளிப்கார்ட் குழு தலைமை நிர்வாக அதிகாரி பின்னி பன்சால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் வால்மார்ட் நிறுவனம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னி பன்சாலின் ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருகிறது.

பிளிப்கார்ட் இணை நிறுவனர் பின்னி பன்சாலின், தனிப்பட்ட நடத்தை தவறு குற்றச்சாட்டு காரணமாக பிளிப்கார்ட் குழு தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளதாக இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் வால்மார்ட் நிறுவனம் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால், அந்த நிறுவனம் தொடங்கியதில் இருந்து முக்கிய இடம் வகித்து வருகிறார். ஆனால் சமீபத்தில் நடந்த நிகழ்வுகள் அவர் மீதான திசைதிருப்பலை எற்படுத்தி வருகிறது. இதனால் பின்னி பன்சால் ராஜினாமா செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ-காமர்ஸ் நிறுவனம் மற்றும் வால்மார்ட் நிறுவனம், பின்னி பன்சால் மீது நடத்தை தவறு குற்றச்சாட்டை வைத்துள்ளது. எனினும் அவர் அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த புகாரின் பேரில் பின்னி குறித்து மேற்கொண்ட விசாரணையில், எந்த ஆதாரங்களும் கண்டுபிடிக்கவில்லை. இதனால், பின்னி மீதான புகார்களை உறுதிப்படுப்பட முடியவில்லை. ஆனால் இது அவர் மீதான மற்ற குறைபாடுகளை இது வெளிபடுத்தியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பன்சாலுக்கு பதிலாக கல்யாண் கிருஷ்ணமூர்த்தி தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். பிளிப்கார்ட் இ-காமர்ஸ் செயல்பாடுகளுக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் கல்யாண் கிருஷ்ணமூர்த்தி, இனி ஆடை விற்பனை வலைத்தளங்களான மைந்த்ரா (Myntra) மற்றும் ஜபாங் (Jabong) உள்ளிட்ட இணைய வியாபாரப் பிரிவுகளுக்கான தலைமை நிர்வாகியாகவும் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News