அமேசான் மற்று ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள் மார்க்கெட் நிலவரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை

ஆன்லைன் வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தேர்வு செய்வதில் எந்தவொரு விதிமீறல்களையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது

அமேசான் மற்று ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள்  மார்க்கெட் நிலவரத்தை தவறாகப் பயன்படுத்தவில்லை

சந்தை நடைமுறைகளை பார்க்கும் போது யாரும் மேலாதிக்கத்தை செய்யவில்லை என்று கூறியது

New Delhi:

 

காம்ப்டிஷன் கமிஷன் ஆஃப் இந்தியா (CCI)அமேசான் மற்றும் வால்மார்ட்க்கு சொந்தமான ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள் ஆன்லைன் வணிகர்கள் மற்றும் பிராண்டுகளை தேர்வு செய்வதில் எந்தவொரு விதிமீறல்களையும் செய்யவில்லை என்று கூறியுள்ளது.

சுமார் 3500க்கும் மேற்பட்ட ஆன்லைன் விற்பனையாளர்களை பிரதிநிதித்துவம் படுத்தும் ஆல் இந்தியா ஆன்லைன் வெண்டார்ஸ் அஸோஸியேஷன்,(AIOVA) நாட்டில் ஆயிரக்கணக்கான ஆன்லைன் விற்பனையாளர்கள் உள்ள நிலையில் அமேசான் மற்றும் ஃபிலிப்கார்ட் நிறுவனங்கள் தங்களுக்கு சாதகமான விற்பனையாளர்களை மட்டுமே ஊக்கிவிக்கிறதும் என்று வழக்கு தொடுத்திருந்தது.

மேலும், பொருட்களுக்கு நியாயமற்ற அல்லது பாரபட்சமான விலைகளை நிர்ணயம் செய்து ஆன்லைன் வணிகத்தில் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்ற நாட்டின் நம்பத்தன்மை குறித்த சட்டவிதிமுறைகளை மீறியதாக தன் தரப்பு வாதத்தை கூறியது.

Newsbeep

ஆனால் இந்த வாதத்தை சிசிஐ நிராகரித்தது. மேலும் தற்போது உள்ள சந்தை நடைமுறைகளை பார்க்கும் போது யாரும் மேலாதிக்கத்தை செய்யவில்லை என்று கூறியது. மேலும், அமேசான் நிறுவனமும் விற்பனையாளர்களை தேர்ந்தெடுப்பதில் விதிமீறல்களில் ஈடுபடவில்லை என்று கூறியது.

இந்நிலையில் ஆல் இந்தியா ஆன்லைன் வெண்டார்ஸ் அஸோஸியேஷனின் வழக்கறிஞர் சாணக்கியா பாஸா இந்த வழக்கை மேல் முறையீடுக்கு கொண்டு செல்வதாக கூறியுள்ளார்.

இந்த வழக்கு குறித்து ஃபிலிப்கார்ட் மற்றும் அமேசான் நிறுவனங்கள் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.