This Article is From Dec 28, 2019

உள்நாட்டு வளர்ச்சி பலவீனமாக இருந்தாலும் நிதிநிலையில் ஸ்திரத்தன்மை உள்ளது :ஆர்பிஐ

ஒரு முக்கிய உள்கட்டமைப்பு கடன் வழங்குநரான ஐ.எல்.அண்ட் எஃப்எஸ் வீழ்ச்சியடைந்த பின்னர் நாட்டின் நிழல் வங்கித் துறை கடந்த ஆண்டு முதல் போராடி வருகிறது. இது வங்கிகளையும் வெகுவாக பாதித்துள்ளது.

உள்நாட்டு வளர்ச்சி பலவீனமாக இருந்தாலும் நிதிநிலையில் ஸ்திரத்தன்மை உள்ளது :ஆர்பிஐ

பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் மிகக் குறைவான நிலையிலும் இந்தியாவின் நிதி அமைப்பு நிலையாக உள்ளதென இந்திய ரிசர்வ் வங்கி  தெரிவித்துள்ளது. 

“உலகளாவிய நிதிச் சந்தைகளில் நுகர்வு மற்றும் முதலீடு இரட்டை இயந்திரங்களை புதுப்பிப்பது முக்கியமான சவாலாக உள்ளது” என்று ரிசர்வ் வங்கி டிசம்பர் 27 அன்று வெளியிட்ட நிதி நிலைத்தன்மை குறித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பொருளாதாரத்தில் ஒட்டுமொத்த மந்த நிலை காரணமாக கடன் தேவை குறைந்து விட்டதால் கடன் வழங்குநர்கள் சிரமப்படுகிறார்கள். வங்கித்துறைகளில் கடன்களின் பங்கு குறைந்து விட்டதால் வங்கிகளுக்கு முன்னேற்றம் தேவை என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

எந்தவொரு முறையற்ற செயல்பாட்டு இழப்புகளையும் உள்வாங்க அரசுக்கு சொந்தமான பொதுத்துறை வங்கிகள் வலுவான நிலையை உருவாக்க வேண்டும். அதே நேரத்தில் தனியார் கடன் வழங்குநர்கள் பெருநிறுவன நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

ஒரு முக்கிய உள்கட்டமைப்பு கடன் வழங்குநரான ஐ.எல்.அண்ட் எஃப்எஸ் வீழ்ச்சியடைந்த பின்னர் நாட்டின் நிழல் வங்கித் துறை கடந்த ஆண்டு முதல் போராடி வருகிறது. இது வங்கிகளையும் வெகுவாக பாதித்துள்ளது. 

“எந்தவொரு வங்கி சாரா நிதி நிறுவனங்கள் அல்லது வீட்டுவசதி நிதி நிறுவனங்களின் தோல்வி அதன் கடன் வழங்குபவர்களுக்கு அதிர்ச்சியாக செயல்படும்” என்று அந்த அறிக்கை கூறியுள்ளது. 

பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி (பிஎம்சி) ஆகியவற்றில் நடந்த மோசடிக்கு பின்னர் 1,500 க்கும் மேற்பட்ட நகர்ப்புற கூட்டுறவு வங்கிகளின் தவறுகள் அம்பலப்படுத்தப்பட்டன. மார்ச் மற்றும் செப்டம்பர் 2019 க்கு இடையில் இந்த வங்கிகளின் செயல்திறன் கணிசமாக மோசமடைந்ததால் இந்த வங்கிகளில் நிர்வாகத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்துள்ளது.

பி.எம்.சி ஒரு ரியால்டி நிறுவனத்திற்கு வழங்கிய கடன்களை மறைக்க 21,000க்கும் மேற்பட்ட கற்பனைக் கணக்குகளை உருவாக்கியது. இது குறைந்தது 4,355 கோடி இழப்புக்கு வழிவகுத்தது.