'நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது; ஆனால் பின்னடைவு ஏற்படவில்லை' : நிதியமைச்சர்!!

நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள், கார்ப்பரேட் வரி உள்ளிட்டவை நீக்கப்பட்டன. 

வங்கித்துறைக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.

நாட்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இருப்பினும் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். இதனை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் கூறினார். 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று ஆற்றிய உரையில் கூறியதாவது-

வங்கித்துறைக்கு ஏற்பட்டிருக்கும் அழுத்தத்தை மத்திய அரசு உணர்ந்துள்ளது. வங்கித் துறையில் உள்ள சிக்கல்களை தீர்ப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். 5 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் இலக்கை எட்டுவதுதான் வங்கித்துறையில் உள்ள இலக்கு. இதனை எட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

அன்னிய நேரடி முதலீடு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தை விட பாஜக ஆட்சியில் சிறப்பான முன்னேற்றத்தை கண்டுள்ளது. 2009 - 2014-ல் 189.5 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த அன்னிய நேரடி முதலீடு, 2019-ல் 283.9 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்திருக்கிறது. 

நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்திருக்கிறது. இருப்பினும் இதனால் பின்னடைவு ஏதும் ஏற்படவில்லை. இதனை சரி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். 
இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார். 

நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை சரி செய்வதற்காக வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விதிக்கப்பட்ட அதிக வரிகள், கார்ப்பரேட் வரி உள்ளிட்டவை நீக்கப்பட்டன. 

ஹைலைட்ஸ்

  • Government dismisses Opposition's charge of economic recession
  • There's no recession, there will be no recession, says Nirmala Sitharaman
  • Government will release GDP data for Q2 on Friday evening
More News