This Article is From Nov 21, 2018

வாட்ஸ் ஆப் இந்தியத் தலைவராக அபிஹிஜித் போஸ் நியமனம்

போஸ் தனது பணியை 2019 ஆண்டின் தொடக்கம் முதல் பணியாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வாட்ஸ் ஆப் இந்தியத் தலைவராக அபிஹிஜித் போஸ் நியமனம்
MUMBAI:

ஃபேஸ் புக் நிறுவனம் உரிமையாக்கியுள்ள வாட்ஸ் ஆப் நிறுவனத்தின் இந்தியத் தலைவராக அபிஹிஜித் போஸ் என்பவரை நியமித்துள்ளது. அபிஹிஜித் போஸ் இதற்கு முன்பு மொபைல் பேமெண்ட் நிறுவனமான ஈஸிடேப் (Ezetap) நிறுவனத்தின் இணை நிறுவனராகவும் மற்றும் தலைமை நிர்வாகியாகவும் இருந்து வந்துள்ளார். 

தற்போது செய்தி தளத்தளத்திற்கு முதன் முறையாக தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

போஸ் தனது பணியை 2019 ஆண்டின் தொடக்கம் முதல் பணியாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

.