பிஃஎப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒர் நற்செய்தி!

பணியில் இருந்து விலகும் நாளை இனி ஊழியர்களே இணையத்தில் அப்டேட் செய்யும் வகையில், புதிய வசதிகளை ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பிஃஎப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு ஒர் நற்செய்தி!

முந்தைய நிறுவனத்தில் பணிபுரிந்து முடித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மட்டுமே வெளியேறும் தேதியை புதுப்பிக்க முடியும்

வருங்கால வைப்பு நிதியில் (PF) பரிமாற்றம் செய்யும் செயல்முறையை எளிதாக்கும் வகையில் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி ஆணையம் (EPFO) ஒரு மாபெரும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில், ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தேதியை ஊழியரே அப்டேட் செய்யும் வகையில், ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையம் புதிய வசதிகளை மேம்படுத்தியுள்ளது. 

ஒரு நிறுவனத்தில் இருந்து ஊழியர்கள் வெளியேறும் தேதி என்பது வருங்கால வைப்பு நிதி பரிமாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது. ஒரு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் தேதியை ஊழியர்கள் வைப்பு நிதி ஆணையத்தில் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். அப்படி பதிவு செய்யும் பட்சத்திலே, அந்த வருங்கால வைப்பு நிதி தொகையானது அடுத்த சேரும் பணியில் மீண்டும் இணைத்துக்கொள்வதோ, அல்லது தொகையை திரும்ப பெறுவதோ உள்ளிட்ட எந்த பரிமாற்றத்தையும் செய்ய முடியும். 

முந்தைய நிறுவனத்தில் பணிபுரிந்து முடித்த இரண்டு மாதங்களுக்குப் பின்னர் மட்டுமே வெளியேறும் தேதியை புதுப்பிக்க முடியும். இந்த புதிய மாற்றத்திற்கு முன்பு, ஊழியர்கள் வைப்பு நிதி ஆணைய இயங்குதளத்தில் வெளியேறும் தேதியை புதுப்பிக்க முதலாளிகளுக்கு மட்டுமே அதிகாரம் இருந்தது. 

EPFO: UAN போர்டலில் தேதியை மாற்றுவது எப்படி:


(UAN) எனப்படும் யூனிவர்சல் போர்டல் கணக்கு எண்ணை லாக் இன் செய்ய வேண்டும். 

அதில், மேனேஜிற்கு செல்ல வேண்டும். 

அங்கு 'மார்க் எக்ஸிட்'டை கிளிக் செய்ய வேண்டும். 

செலக்ட் எம்பிளாய்மெண்ட் என்பதை தேர்வு செய்த பின்னர் முந்தைய பி.எஃப் கணக்கு எண்ணை தேர்வு செய்ய வேண்டும். 

வெளியேறுவதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டும். 

இதையடுத்து, உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஒரு (OTP) வரும், அந்த ஒடிபியை அளித்து நீங்கள் உங்கள் பி.எஃப் பணத்தை எளிதாக பரிமாற்றம் செய்யவும், திரும்பெறவும் முடியும். 

More News