
வட்டி விகிதம் குறைப்பால் 6 கோடி சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவார்கள்.
ஹைலைட்ஸ்
- EPFO என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூக பாதுகாப்பு திட்டமாகும்
- வட்டி விகிதம் 0.15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது
- சுமார் 6 கோடி சந்தாதாரர்கள் அரசின் நடவடிக்கையால் பாதிக்கப்படுவார்கள்
EPFO எனப்படும் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் நடப்பு நிதியாண்டுக்கு 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் தெரிவித்துள்ளார்.
2018 - 19 நிதியாண்டில் பணியாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 8.65 சதவீதமாக இருந்தது. இது தற்போது 0.15 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 6 கோடி சந்தாதாரர்கள் பாதிக்கப்படுவார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பணியாளர் வருங்கால வைப்பு நிதி (Employees' Provident Fund) என்பது தொழிலாளர்களுக்கு அரசு வழங்கும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஒன்று.
அரசு நிறுவனங்களிலும் தனியார் நிறுவனங்களிலும் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் எதிர்கால நலன் கருதி தொழிலாளரின் மாதாந்த ஊதியத்திலிருந்து, அவர் பணியாற்றும் நிறுவனம் சார்பிலும், பணியாளர் சார்பிலும் பங்களிப்பு செய்வதாகும். இந்தப்பங்களிப்புப்பணத்தை தொழிலாளர் ஓய்வு பெற்ற பின்னர் திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படும் தொகைக்கு அரசு வட்டி வழங்கி வருகிறது. இதற்கான வட்டி விகிதம்தான் நடப்பு நிதியாண்டில் 8.65 சதவீதத்திலிருந்து 8.50 சதவீதமாக குறைக்கப்பட்டிருக்கிறது.
ஆண்டுவாரியாக வட்டி விகிதங்கள்
ஆண்டு | வட்டி விகிதம் |
---|---|
2019-20 | 8.50% |
2018-19 | 8.65% |
2017-18 | 8.55% |
2016-17 | 8.55% |
2015-16 | 8.80% |
2014-15 | 8.75% |
2013-14 | 8.75% |
2012-13 | 8.50% |