This Article is From May 13, 2020

பி.எஃப். பலன்களை அறிவித்தது மத்திய அரசு! பணியாளர்களின் 'டேக் ஹோம்' அதிகரிக்கிறது

பி.எஃப். சந்தா 12 சதவிதம் என்ற நிலையில் இருந்து நிறுவனங்கள், ஊழியர்களின் கருதி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து 12 சதவீத பி.எஃப் தொகையை செலுத்தும். ஊழியர்கள் 10 சதவீதத்தை அளித்தால் போதுமானது. 

பி.எஃப். பலன்களை அறிவித்தது மத்திய அரசு! பணியாளர்களின் 'டேக் ஹோம்' அதிகரிக்கிறது

டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

பொருளாதார முன்னேற்றத்திற்கான சிறப்பு திட்டத்தை இன்று அறிவித்த மத்திய அரசு, பி.எஃப் தொடர்பான பலன்களையும் வெளியிட்டது. இதனால் 72.25 லட்சம் ஊழியர்கள் பலன் அடைவார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனாவால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பாதிப்பிலிருந்து மீள்வதற்காக மத்திய அரசு ரூ. 20 லட்சம் கோடி மதிப்பீட்டில் தன்னிறைவு இந்தியா என்ற திட்டத்தை செயல்படுத்தவுள்ளது. இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்திற்கான பி.எப். பணத்தை மத்திய அரசே  செலுத்தும். ஏற்கனவே 3 மாதங்களுக்கு பி.எப் பணத்தை செலுத்துவோம் என அறிவித்திருந்தது. இதனால் 3.67 லட்சம் நிறுவனங்கள் பலன் பெறும். 

பி.எஃப் தொகைக்காக ரூ. 2,500 கோடி ஒதுக்கியுள்ளோம். இதன் மூலம் 72.25 லட்சம் ஊழியர்கள் பலன் அடைவார்கள். மத்திய அரசே பி.எஃப் தொகையை செலுத்துவதால் ரூ. 6,500 கோடி அளவுக்கு ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் மிச்சம் ஏற்படும்.

பி.எஃப். சந்தா 12 சதவிதம் என்ற நிலையில் இருந்து நிறுவனங்கள், ஊழியர்களின் கருதி 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

மத்திய மாநில அரசுகள் தொடர்ந்து 12 சதவீத பி.எஃப் தொகையை செலுத்தும். ஊழியர்கள் 10 சதவீதத்தை அளித்தால் போதுமானது. 

டிடிஎஸ் பிடித்தம் 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இதனால் மக்களிடம் ரூ. 50 ஆயிரம் கோடி வரை பணம் புரள வாய்ப்பு ஏற்படும். 
 

.