பயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 0.28 அதிகரித்துள்ளது: SIAM தகவல்

பயணிகள் வாகனங்கள் வணிக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 12.76 சதவீதம் குறைந்துள்ளது.

பயணிகள் வாகன விற்பனை அக்டோபரில் 0.28 அதிகரித்துள்ளது: SIAM தகவல்

பயணிகள் வாகனங்கள் என்பது பயணிகள் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வேன்களும் அடங்கும்.

உள்நாட்டு சந்தையில் மொத்த பயணிகள் வாகன விற்பனை கடந்த மாதம் 0.28 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தொழிற்துறை அமைப்பான சியாம் தெரிவித்துள்ளது. சொசைட்டி ஆஃப் இந்தியன் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்களின் அமைப்பு இன்று தகவல்களை வெளியிட்டுள்ளது. அக்டோபரில் மொத்தம் 2,85,027 பயணிகள் வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன.

இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 2,84,223 ஆக இருந்தது என்று தொழிற்துறை அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. பயணிகள் வாகனங்களின் விற்பனை ஓரளவு அதிகரிப்பு வாகனத்துறையில் உள்ள சரிவை மீட்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது. ஆட்டோ மொபைல் துறை தேவைக்குறைவு மற்றும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்பு இழப்புகளோடு போராடி வருகிறது.

 தொழிலமைப்பு சியாமின் விற்பனை குறித்தான 10 தகவல்கள்: 

பயணிகள் வாகனங்கள் பிரிவில் உற்பத்தி 21.14 சதவீதம் குறைந்து 2,69,186 ஆக இருந்தது அதே நேரத்தில் ஏற்றுமதி 2.18 சதவீதம் குறைந்துள்ளது. 

மொத்த பயணிகள் வாகனங்களின் உற்பத்தி 21.14 சதவீதம் குறைந்து 2,69,186 ஆக இருந்தது. அதே நேரத்தில் ஏற்றுமதி 2.18 சதவீதம் குறைந்துள்ளது

மொத்த பயணிகள்  வாகன விற்பனையில் 1,62,343 ஆக உள்ளது. இது முந்தைய ஆண்டின் காலத்துடன் ஒப்பிடும்போது 30.22 சதவீதம் குறைந்துள்ளது. 

பயணிகள் வாகனங்கள் என்பது பயணிகள் பயன்பாட்டு வாகனங்கள் மற்றும் வேன்களும் அடங்கும். 

பயணிகள் வாகனங்கள் வணிக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 12.76 சதவீதம் குறைந்துள்ளது. 

மொத்த உற்பத்தி 26.22 சதவீதமாக சரிந்தது. ஏற்றுமதி 2.72 சதவீதம் உயர்ந்துள்ளது. 

இந்த மாதத்தில் மொத்தம் 66,773 வணிக வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இதில் 51,439 இலகுரக வர்த்தக வாகனங்கள் அடங்கும். 

அக்டோபரில் மொத்தம் 17,57,264 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டன. இது  முந்தைய ஆண்டைவிட 14.43 சதவீதம் குறைந்துள்ளது. 

இருசக்கர ஏற்றுமதி 8.03 சதவீதம் அதிகரித்துள்ளது. இருப்பினும் உற்பத்தி 26.57 சதவீதம் குறைந்துள்ளது. 

Listen to the latest songs, only on JioSaavn.com