டிசம்பரில் கார்களின் விற்பனை 8.4 சதவீதமும், உற்பத்தி 12.5 சதவீதமும் சரிவு : SIAM தகவல்

வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. நடுத்தர மற்றும் கன ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 31.7 சதவீதம் குறைந்து 21,388 எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது.

டிசம்பரில் கார்களின் விற்பனை 8.4 சதவீதமும், உற்பத்தி 12.5 சதவீதமும் சரிவு : SIAM தகவல்

2019 ஏப்ரல் - டிசம்பரில் பயணிகள் வாகனங்கள் 16.40 சதவீதம் அளவுக்கு விற்பனையில் சரிந்துள்ளன.

இந்தியாவில் கார்களின் உற்பத்தி 12.5 சதவீதமும், விற்பனை 8.4 சதவீதமும் டிசம்பர் மாதத்தில் சரிவை சந்தித்துள்ளன. இந்த தகவலை SIAM எனப்படும் இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் வெளியிட்டுள்ளது.

பயணிகள் கார்கள், சொகுசு கார்கள், வேன்களின் விற்பனை 1.2 சதவீதம் குறைந்து 2 லட்சத்து 35 ஆயிரத்து 786 எண்ணிக்கையில் டிசம்பரில் விற்பனையாகியிருக்கிறது. இவற்றில், கார்கள் 2018-ம் ஆண்டின்போது 1,55,159 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியிருந்தது. இது 2019-ல் 1,42,126 - ஆக குறைந்திருக்கிறது. 

வர்த்தகத்திற்கு பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள் உள்பட அனைத்து ஆட்டோ மொபைல் வாகனங்களை கணக்கிட்டுப் பார்க்கும்போது, மொத்தம் 1,405,776 வாகனங்களின் விற்பனை அதாவது, 13.08 சதவீதம் குறைந்திருக்கிறது. 

அதே நேரத்தில் குறிப்பிட்ட தொழிலுக்கு பயன்படுத்தப்படும், டிராக்டர், குப்பை அள்ளும் வாகனம் போன்ற Utility vehicles -ன் விற்பனை 30.02 சதவீதம் அதிகரித்திருக்கிறது. 

கடந்த 2018 டிசம்பரில் 65 ஆயிரத்து 567 -ஆக இருந்த இதன் விற்பனை, 2019 டிசம்பரில் 85 ஆயிரத்து 252 ஆக அதிகரித்திருக்கிறது. இருப்பினும் வேன்களின் விற்பனை 53.36 சதவீதம் குறைந்து மொத்தமே 8,408 வேன்கள் விற்பனையாகியிருக்கின்றன. 

வர்த்தக ரீதியில் பயன்படுத்தப்படும் வாகனங்களின் விற்பனை பெரும் சரிவை சந்தித்துள்ளது. நடுத்தர மற்றும் கன ரக வர்த்தக வாகனங்களின் விற்பனை 31.7 சதவீதம் குறைந்து 21,388 எண்ணிக்கையில் விற்பனையாகி உள்ளது.

டூ வீலர்களின் விற்பனை 16.6 சதவீதம் சரிவை சந்தித்து 10 லட்சத்து 50 ஆயிரத்து 38 எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கிறது. 

ஒட்டுமொத்த அளவில் ஓராண்டில் உள்ளூரில் உற்பத்தியாகும் வாகனங்கள் 1,816,112 எண்ணிக்கை குறைந்து 5.2 சதவீத சரிவை சந்தித்துள்ளது. இவற்றில் பயணிகள், வர்த்தக, இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் அடங்கும். 

கடந்த ஏப்ரல் 1-ம்தேதி முதல் பி.எஸ். 4 விதிகள் அமலுக்கு வரவுள்ளன. இதனால் கார்கள் விலை அதிகரிக்கும் என்பதால் உற்பத்தியும் சற்று குறையத் தொடங்கியுள்ளது. ஆட்டோ மொபைல் துறைக்கு விதிக்கப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரியை குறைத்தால்தான் முன்னேற்றம் ஏற்படும் என்று இந்திய ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜன் வதேரா தெரிவித்துள்ளார். இந்த வரி குறைப்பு, 2020 பட்ஜெட்டில் இடம்பெற வேண்டும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார். 

கடந்த ஏப்ரல்  - டிசம்பர் 2019-ல் ஒட்டுமொத்த ஆட்டோ மொபைல் ஏற்றுமதி 3.86 சதவீதம் அதிகரித்திருந்தது. இந்த கால கட்டத்தில், பயணிகள் வாகனம் 5.89 சதவிதமும், இரு சக்கர வாகனங்கள் 6.87 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டிருந்தன. அதே நேரத்தில் வர்த்தக பயன்பாட்டு வாகனங்கள் 38.74 சதவீதமும், மூன்று சக்கர வாகனங்கள் 8.8 சதவீதமும் ஏற்றுமதியில் குறைந்திருந்தன என்று SIAM தெரிவித்துள்ளது. 
 

Listen to the latest songs, only on JioSaavn.com