டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.61- ஆக நிறைவு

இன்றைய வர்த்தகத்தின்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.61- ஆக நிறைவு பெற்றுள்ளது

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.61- ஆக நிறைவு

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது

சர்வதேச காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில வாரங்களாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதனை சரி செய்வதற்கு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு ரூபாயின் மதிப்பு உயரவில்லை.

இன்றைய வர்த்தகத்தின் தொடக்கத்தின்போது, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.43- ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக உயர்வடைந்து ரூ. 73.37-ஆக இருந்தது. இதன்பின்னர் வீழ்ச்சியை சந்தித்த ரூபாயின் மதிப்பு கடைசியாக ஒரு டாலருக்கு ரூ. 73.61-ஆக முடிவடைந்துள்ளது.

பங்குச்சந்தையை பொறுத்தவரையில் தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 131 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 10 ஆயிரத்து 433-ல் நிறைவு பெற்றது. ரூபாயின் மதிப்பு குறைந்து வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ரூ. 1,165.63 கோடி மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com