This Article is From Oct 04, 2018

டாலருக்கு முன் மதிப்பற்று போகும் இந்திய ரூபாய் - ஒரே நாளில் 43 காசுகள் வீழ்ச்சி

சர்வதேச காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு நாளுக்கு நாள் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது

டாலருக்கு முன் மதிப்பற்று போகும் இந்திய ரூபாய் - ஒரே நாளில் 43 காசுகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் கச்சா எண்ணெயை டாலரில்தான்இறக்குமதி செய்து வருவதால் அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இதேபோன்று சர்வதேச வர்த்தகத்தில் காணப்படும் பதற்றமான சூழ்நிலையால் முதலீட்டாளர்கள் டாலரில் முதலீடு செய்வதையே அதிகம் விரும்புகின்றனர். நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையும் ரூபாயின் மதிப்பு வீழ்ச்சிக்கு ஓர் காரணம். இத்தகைய சூழல்கள் தான் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை வீழ்ச்சியடைய செய்துள்ளன.

கடந்த சில வாரங்களாக தொடர் வீழ்ச்சியை இந்திய ரூபாய் சந்தித்து வரும் நிலையில், வரலாறு காணாத விதமாக இன்று 43 காசுகள் சரிந்து, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 73.77 – ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக முடிவின்போது ரூபாயின் மதிப்பு ரூ. 73.34-ஆக இருந்தது.

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அமெரிக்கா தடை விதித்துள்ளதால், எண்ணெய் விலை சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

.