தனதிரோயோசி நாளில் அதிகரித்த தங்க விலை

இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கிலங்களில் தீபாவளி திருநாளுக்கு முந்தைய நாளை தன திரோயோசி நாளாக கொண்டாடுவது வழக்கம்

தனதிரோயோசி நாளில் அதிகரித்த தங்க விலை

தனதிரோயோசி நாளில் பெரும்பாலான மக்கள் இன்று தங்கம் வாங்க விரும்புவதால் தேவை அதிகரிப்பினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது

இன்று காலை முதல் தங்கம் மற்றும் ஆபரண தங்கத்தின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்கிலங்களில் தீபாவளி திருநாளுக்கு முந்தைய நாளை தன திரோயோசி நாளாக கொண்டாடுவது வழக்கம்.

இந்நாளில் தங்கம் வெள்ளி போன்ற பொருட்கள் வாங்கினால் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் வெகுவாக உள்ளது. பெரும்பாலான மக்கள் இன்று தங்கம் வாங்க விரும்புவதால் தேவை அதிகரிப்பினால் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. மேலும் தங்க நகைகளில் விதவிதமான டிசைன்களும் அதிகரித்துள்ளதால், தங்கம் வாங்க விரும்பும் வாடிக்கையாளர் இதை பெரிதும் விரும்புகிறார்கள்.

ஆல் இந்தியா ஜெம்ஸ் அண்டு ஜுவல்லரி டிரேட் ஃபெடரேஷனின் தலைவர் பிடிஐக்கு கொடுத்த செய்தியில், தனதிரையோஸி தினத்தில் 10-15 சதவீதம் தங்கத்தின் தேவை குறைந்துவிடும் என்று நினைத்தோம். ஆனால், முன்பதிவு திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் 5-7 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

10 கிராம் தங்கம் ரூ.32,690ஆக இன்று விற்பனை செய்யப்படுகிறது. இந்த விற்பனை விலை கடந்த ஆறு வருடங்களை விட மிக அதிகம். கடந்த ஆண்டு இதே நாளில் 10 கிராம் தங்கத்தின் விலை ரூ.30,710ஆக இருந்தது. இந்திய ரூபாயின் மதிப்பு குறைவினால் தங்கத்தின் விலை உயர்வுக்கான சாத்தியத்தை அதிகப்படுத்தியுள்ளதாக கூறியுள்ளனர்.

பி.சி ஜுவல்லரஸின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.கே.ஷர்மா கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக தனதிரோயோஸி நாளில் விற்பனை கூடுதலாக இருக்கும் என்று கூறியுள்ளார். இந்த நல்ல நாளில் திருமணத்திற்கான நகைகளை வாங்குகின்றனர் என்று கூறினார்.

அலுவலக நேரம் முடிந்தபின் மாலை நேரங்களில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார். இரவு வரை தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் வருகை இருந்துகொண்டே இருக்குமென கூறினார்.

தங்கத்தின் தரத்தை உறுதி செய்யும் பிஐஎஸ் (BIS) அமைப்பு பிஐஎஸ் தரச்சான்றிதழ் பெற்ற ஹால்மார்க் தங்கத்தை மட்டுமே வாங்குமாறு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் 4 லட்சம் தங்க நகை விற்கும் வியாபாரிகள் உள்ளனர். ஆனால், இதில் 22,000 மட்டுமே பிஐஎஸ் உரிமத்தை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
Listen to the latest songs, only on JioSaavn.com