This Article is From Sep 24, 2018

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகள் என்ன?- புள்ளி விவரங்கள் தரும் தகவல்கள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெரிய அளவில் கள்ள ரூபாய் நோட்டுகள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை.

பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் விளைவுகள் என்ன?- புள்ளி விவரங்கள் தரும் தகவல்கள்

பணமதிப்பிழப்பால் கருப்பு பணம் பெரிய அளவில் ஒழிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே மிக அதிர்ச்சியளித்த நடவடிக்கைகளில் ஒன்றான பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. இதில் குறைந்த அளவு பலனும், அதிக சிக்கல்களும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் எதிர்பார்த்த அளவுக்கு கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை. அதே நேரத்தில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது நாட்டில் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் கள்ள நோட்டுகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

0oi9ssvg

பிரதமர் மோடி கடந்த 2016 நவம்பரில் நாட்டில் உள்ள 86 சதவீத பணம் செல்லாது என்று அறிவித்தார். அதேநேரம் 99.7 சதவீத தடை செய்யப்பட்ட ரூ. 500 மற்றும் ரூ. 1000 நோட்டுகள் வங்கிகளுக்கு மீண்டும் வந்து சேர்ந்தன. 

பொருளாதார வளர்ச்சி

பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டின் வளர்ச்சி கடந்த 2017 ஜூன் மாதத்தின்போது 5.6 சதவீதமாக குறைந்தது. 100-க்கும் மேற்பட்டோர் பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது உயிரிழந்தனர். 10 லட்சத்திற்கும் அதிகமான தினக்கூலிகள் வேலை இழந்தனர். 

ntfdql8o

வரி வருமானம்

மார்ச் 2017 வரையில் தனி நபர் வருமான வரி 27 சதவீதம் அளவுக்கு உயர்ந்தது. அதற்கு முந்தைய ஆண்டில் இந்த விகிதம் 21 சதவீதமாக இருந்தது. இதன்மூலம் மத்திய அரசின் வருவாய் பெருகியது. இதேபோன்று புதிதாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்தது. இந்த எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டியதாக மத்திய அரசு தெரிவித்தது. இதற்கு முன்பாக வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 62 லட்சமாக இருந்தது. 

f3fsuoq8
begjdr6

கருப்பு பணம்

சட்ட விரோதமான முறையில் அரசுக்கு கணக்கு காட்டாத வகையில் சேமிக்கப்படும் பணம் கருப்பு பணம் எனப்படுகிறது. 2014 தேர்தலின்போது கருப்பு பணத்தை முற்றிலும் ஒழிப்பேன் என்று கூறி பிரதமா மோடி ஆட்சிக்கு வந்தார். ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பெரிய அளவில் கருப்பு பணம் ஒழிக்கப்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

dvime0j8

டிஜிட்டல் பேமென்ட்

நாட்டில் 90 சதவீத பேமென்ட் முறை பணத்தை செலுத்தும் முறையில் இருந்து வந்தது. ஆனால் பணமதிப்பிழப்பு நடவடிக்கு பின்னர் டிஜிட்டல் பேமென்ட் முறை வளர்ந்தது. 

50c79a2

கள்ள நோட்டுகள்

பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் பெரிய அளவில் கள்ள ரூபாய் நோட்டுகள் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. இது  மிகப்பெரும் சாதனை என்று மத்திய அரசு கூறி வருகிறது.