அகவிலைப்படியை 21 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு!! 48 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்

48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் பென்ஷன்தாரர்களும் பலன் அடைவார்கள். மொத்தம் 1.13 கோடி குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

அகவிலைப்படியை 21 சதவீதமாக உயர்த்திய மத்திய அரசு!! 48 லட்சம் ஊழியர்கள் பலனடைகின்றனர்

ஆண்டுக்கு 2 முறை மத்திய அரசின் அகவிலைப்படி அறிவிக்கப்படுகிறது.

ஹைலைட்ஸ்

  • தற்போது 17 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.
  • 1 கோடிக்கும் அதிகமான குடும்பத்தினர் பலன் அடையவுள்ளனர்
  • ஜனவரி தேதியிட்டு அகவிலைப்படி உயர்வு வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 4 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது.

தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 17 சதவீத அகவிலைப்படி அளிக்கப்பட்டு வருகிறது. இது உயர்த்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, இனி 21 சதவீதமாக வழங்கப்படும்.

இதனால் 48 லட்சம் ஊழியர்களும், 65 லட்சம் பென்ஷன்தாரர்களும் பலன் அடைவார்கள். மொத்தம் 1.13 கோடி குடும்பத்தினருக்கு பலன் கிடைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, ஜனவரி 1-ம்தேதி முன் தேதியிட்டு வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் நடவடிக்கையால் கூடுதலாக ரூ. 14,595 கோடி செலவு ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு வந்த பின்னர், 2016-ல் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டதாகவும், அதன்பின்னர் அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருவதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார். 

Listen to the latest songs, only on JioSaavn.com