2018-19 ஆண்டிற்கான வருமான வரி செலுத்தல் காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: நிர்மலா சீதாராமன்!

2018 - 2019 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

2018-19 ஆண்டிற்கான வருமான வரி செலுத்தல் காலக்கெடு ஜூன் 30 வரை நீட்டிப்பு: நிர்மலா சீதாராமன்!

கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்துலாக உருவெடுத்துள்ள நிலையில் மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், சிறப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 

அதன்படி, 2018 - 2019 நிதி ஆண்டிற்கான வருமான வரி செலுத்துவதற்கான காலக்கெடு ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். 

வருமான வரி செலுத்துவதற்கான கடைசி தேதி மார்ச் 31 என இருந்தது குறிப்பிடத்தக்கது. 

காலதாமதமாக செலுத்தும் வரிக்கு விதிக்கப்படும் வரிவிகிதமும், 12 சதவிகிதத்திலிருந்து 9 சதவிகிதமாக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த காலக்கெடுவும் ஜூன் 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக, வருமான வரிச் சட்டத்திற்குக் கீழ் அனுப்பபடும் அனைத்து அறிவிப்புகளின் காலக்கெடுக்களும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் பரவலால் இந்தியப் பொருளாதாரம் மீது எற்பட்டிருக்கும் தாக்கத்தை ஸ்திரப்படுத்தும் வகையில் சிறப்புப் பொருளாதார அறிவிப்புகள் ‘விரைவில் வெளியிடப்படும்' என்றும் உறுதி அளித்துள்ளார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்.