Profit

சைரஸ் மிஸ்டிரியை நீக்கியதில் எந்த விதிமீறலும் இல்லை - தீர்ப்பாயம்

டாட்டா நிறுவனத்துக்கு எதிராக, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, நிறுவனங்களுக்கான தேசிய தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது

 Share
EMAIL
PRINT
COMMENTS

டாட்டா நிறுவனத்துக்கு எதிராக, அந்நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டிரி, நிறுவனங்களுக்கான தேசிய தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தன்னை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது விதிமுறைகளுக்கு புறம்பானது என்பதே சைரஸ் மிஸ்டிரியின் மனு. ஆனால், அவர் நீக்கப்பட்டதில் எந்த விதிமீறலும் இருப்பதாக தெரியவில்லை என்று கூறி தீர்ப்பாயத்தின் மும்பை அமர்வு, மனுவை தள்ளுபடி செய்தது. மேலும், மிஸ்டிரி, டாட்டா நிறுவனத்தின் உயர்மட்ட குழுவின் நம்பிக்கையை பெறாததாலேயே அவர் நீக்கப்பட்டுள்ளார் என்றும் தீர்ப்பாய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியானவுடன், டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்தன. டாட்டா ஸ்டீல் 1.15% உயர்வு, டாட்டா மோட்டார்ஸ் 1.71%, டாட்டா கெமிக்கல்ஸ் 1.43%, டாட்டா காஃபி 2.16%, டாட்டா கம்யூனிகேஷன் 0.40%, டாட்டா எலக்ஸி 1.28%, டாட்டா குளோபல் பீவரேஜஸ் 1.41% ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளன. ஜூன் காலாண்டு முடிவுகளை எதிர்நோக்கப்படுவதால் டி.சி.எஸ் பங்குகள் மட்டும் சரிவில் இருந்தன.

2012-ம் ஆண்டு ரத்தன் டாட்டா ஓய்வு பெற்ற பிறகு, டாட்டா குழுமத்தின் 6-வது தலைவராக பதவி ஏற்றார் சைரஸ் மிஸ்டிரி. ஆனால், கடந்த 2016 அக்டோபரில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார், பின் ஃபிப்ரவரி 2017-ல் உயர்மட்டக் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

சைரஸ் மிஸ்டிரியின் குடும்பம் நடத்தும் சைரஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனம், தாங்கள் டாட்டா குழுமத்தில் சிறிய பங்குதாரர் என்ற பெயரில் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தது. அதில் டாட்டாவின் உயர்மட்ட குழு மற்றும் நிர்வாகத்தில் குளறுபடிகள் இருப்பதாகவும், சிறிய பங்குதாரர்களிடம் பாரபட்சமாக செயல்படுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

ஆனால் தீர்ப்பாயமோ, டாட்டா உயர்மட்ட குழுவின் நம்பிக்கையை சைரஸ் இழந்துவிட்டார். நிறுவனத்தின் முக்கிய தகவல்களை வருமான வரித் துறையிடம் கொடுத்ததாகவும், ஊடகங்களிடம் தகவலை கசிய விட்டதாகவும், நிறுவனத்தின் பிரச்சனையை பொது வெளிக்கு கொண்டு வந்ததாதால் தான் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். ஆகையால் இதில் விதிமீறல் எதுவும் இல்லை என்று தீர்ப்பாயம் கூறி சைரஸ் மிஸ்டிரியின் வாதத்தை தள்ளுபடி செய்துள்ளது.
 



Get Breaking news, live coverage, and Latest News from India and around the world on NDTV.com. Catch all the Live TV action on NDTV 24x7 and NDTV India. Like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Quick Links
PNR Status

................................ Advertisement ................................

Top