This Article is From Nov 16, 2018

கஜா புயலால் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

கஜா புயல் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் தென் பகுதிக்கு செல்லும் ரயில்களின் இயக்கத்தை ரத்து மற்றும் மாற்றம் செய்து தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது

கஜா புயலால் ரத்து மற்றும் மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விவரம்

கஜா புயல் காரணமாக தமிழகத்தின் கடலோர பகுதிகளில் கனமழை ஏற்பட்டது.

கஜா புயல் பாதிப்பை தவிர்க்க முன்னெச்சரிக்கையாக தமிழகத்தின் தென் பகுதிக்கு செல்லும் ரயில்களின் இயக்கத்தை ரத்து மற்றும் மாற்றம் செய்து தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்துள்ளது.

மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்

1. ரயில் எண் 56261 அரக்கோணம் - கே.எஸ்.ஆர். பெங்களூரு பயணிகள் ரயில் அரக்கோணம் - ஜோலர் பேட்டை இடையே பகுதி நேரத்திற்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

2. ரயில் எண் 06865 தஞ்சை - திருச்சி சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

3. ரயில் எண் 56723 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் 56724 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

4. ரயில் எண் 56721 மதுரை - ராமேஸ்வரம் பயணிகள் ரயில் மற்றும் 56722 ராமேஸ்வரம் - மதுரை பயணிகள் ரயில் ரத்து.

5. ரயில் எண் 56829 திருச்சி - ராமேஸ்வரம் பயணிகள் ரயில், 56830 ராமேஸ்வரம் - திருச்சிராப்பள்ளி பயணிகள் ரயில் ஆகியவையும் ரத்தாகி உள்ளது.

 

 

.