சரிவில் தங்கம் விலை; அடுத்த சில வாரங்கள் நிலவரம் எப்படி இருக்கும்?

பல நாட்டு கரென்சிகளுக்கு நிகரான டாலர் விலை அதிகரித்ததே தங்கம் விலை குறையக் காரணம்

சரிவில் தங்கம் விலை; அடுத்த சில வாரங்கள் நிலவரம் எப்படி இருக்கும்?

கடந்த இரண்டு வாரங்களில் தங்கம் விலை 1% குறைந்துள்ளது. இந்த காலத்தில், 10 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 31,090 - 31,210 ஆக இருக்கிறது. பல நாட்டு கரென்சிகளுக்கு நிகரான டாலர் விலை அதிகரித்ததே தங்கம் விலை குறையக் காரணம். இனி அடுத்து வரும் நாட்களில் தங்கம் விலை எப்படி இருக்கும் என்றும், விலை மாற்றத்துக்கான காரணிகளையும் இங்கே காணலாம்.

டாலர் மதிப்பு குறையும் அறிகுறி:

உலக அளவில் தங்கத்தின் விலை மாற்றம், டாலர் விலை மாற்றத்தோடு நேரடி தொடர்பில் இருக்கிறது. தற்போது ஆமெரிக்க டாலர்களின் மதிப்பு அதிகரித்துள்ளதால், தங்கம் விலையும் குறைந்துள்ளது. டாலர் மதிப்பு தொடர்ந்து நல்ல நிலையிலிருக்கும் பட்சத்தில் தங்கம் விலை மேலும் குறையும் என்று எதிர்பார்க்கலாம்.

மத்திய வங்கிகளின் கொள்கை :

இந்தியாவின் ரிசர்வ் வங்கி மற்றும் அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் ஆகிய வங்கிகளின் வட்டிக் கொள்கைகளில் மாற்றம் இருந்தாலும் தங்கம் விலையில் மாற்றம் இருக்கும். இரண்டு வங்கிகளும் ஆகஸ்ட் 1-ம் தேதி தங்கள் கொள்கைகளை அறிவிக்க இருக்கின்றன. ஒருவேளை ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை அதிகரித்தால், தங்கம் விலை அதிகரிக்கக் கூடும்.

மீளும் சீன சந்தை:

அமெரிக்காவுடனான வர்த்தக போரால், சீனாவின் கரென்ஸி மதிப்பு குறைந்துள்ளது. எனவே தேவையும் குறைந்துள்ளது. பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்ய விரும்பவில்லை. இந்த நிலை கூடிய விரைவில் மாறி, சீன சந்தை மீண்டால் தங்கம் விலையில் மாற்றம் இருக்கலாம்.

விழாக்காலம் மற்றும் மழைக்காலம்:

இந்தியாவில் விழாக்காலம் மற்றும் மழைக்கால தங்கத்தின் தேவை வரும் செப்டம்பர் மாதம் முதல் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. ஆகஸ்ட் மாதம் தான் தங்கத்துக்கான தேவை அதிகரிக்கத் தொடங்கும். அதுவரையில் விலையில் பெரிய உயர்வு இருக்காது என்றும் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

தள்ளாட்டத்தில் தங்கம் விலை:

அமெரிக்கா - சீனா பொருளாதார போர், போன்ற காரணங்கள் அடுத்த சில வாரங்களுக்கு தங்கம் விலை சரிவிலேயே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

current price of gold, gold current price in india, gold current rate, gold price today, current price of gold in India, current price of gold in Delhi, current gold price in Delhi

இந்த வாரம் தங்கம் விலை மேலும் 300 - 500 ரூபாய் வரை சரியும் என்று எதிர்பார்க்கலாம் என அரிஹாந்த் செக்யூரிட்டீஸ் நிறுவன சந்தை ஆராய்ச்சியாளர் கத்தாரியா தெரிவித்துள்ளார். மேலும் சில நாட்களுக்கு பிறகு 10 கிராம் தங்கம் 29,500 ரூபாய் வரை குறையும் என்றும் அவர் கூறினார்.