Profit

தற்போதைய நிலவரத்தில் எப்படி தங்கம் வாங்குவது?

மற்ற அனைத்தையும் விட தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தற்போதைய நிலவரத்தில் எப்படி தங்கம் வாங்குவது?

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது


ஹைலைட்ஸ்

  1. தங்க முதலீடு மற்ற முதலீடுகளை விட பாதுகாப்பனது தான்
  2. தங்கம் தான் இந்தியாவில் இரண்டாவது அதிகமாக இறக்குமதி செய்யப்படும் பொருள்
  3. தங்க முதலீடு வெறுமனே உணர்பூர்வமாக மட்டும் அமைந்துவிடக் கூடாது

தற்போதைய சந்தை நிலவரத்தில் தங்கம் வாங்கப் பார்க்கிறீர்களா؟ சொத்து குறித்து திட்டமிடும் வல்லுநர்கள் பலரும், ஒரு சிறிய பகுதி முதலீட்டுப் பணத்தை தங்கம் வாங்குவதில் செலவழிக்க வேண்டும் என்கின்றனர். கடந்த சில வாரங்களாக தங்கம் விலையில் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தற்சமயம், 10 கிராம் எடை கொண்ட 22 கேரட் தங்கம் விலை 30,600 ரூபாய்க்குப் பக்கத்தில் இருக்கின்றது. அதேபோல, 10 கிராம் எடை கொண்ட 24 கேரட் தங்கம் விலை 32,500 ரூபாய்க்கு அருகாமையில் இருக்கிறது. எனவே, இப்போது தங்கம் வாங்குவது சரி தானா؟ வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்؟

தங்கம் விலை எதை நோக்கி செல்கிறது?

இது குறித்து அமான் குழும நிறுவனர் அபிஷேக் பன்சால், `தங்கத்தின் விலை 30,800 ரூபாயிலிருந்து 31,600 ரூபாய்க்குள் இன்னும் குறைந்த காலத்துக்கு இருக்கும்' என்று தெரிவித்துள்ளார். 

கச்சா எண்ணெய்க்குப் பிறகு, இந்தியா அதிகம் இறக்குமதி செய்யும் பொருள் தங்கம் தான். எனவே, தங்கத்தின் விலை டாலரில் மதிப்பிட்டு பார்க்கையில் குறைவாக இருந்தால் தான் இந்தியாவுக்கும், இங்கு இருக்கும் தங்க முதலீட்டாளர்களுக்கும் நல்லது. ரூபாய்க்கு நிகரான டாலர் மதிப்பு உயர்ந்து கொண்டே போனால், தங்கம் வாங்கும் செலவும் அதிகரிக்கும்.   

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த சில காலமாக 67- 68-லேயே நிலை கொண்டிருக்கிறது. சிலர், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 70-ஐ நோக்கிப் போகும் என்றும் யூகிக்கின்றனர்.

தற்போதைய சூழலில் தங்க முதலீட்டை எப்படி செய்வது?

மற்ற அனைத்தையும் விட தங்கத்தில் முதலீடு செய்வது தான் பாதுகாப்பானது. ஆனாலும், தங்கத்தில் முதலீடு செய்வது என்பது வெறுமனே உணர்வுபூர்வமான முடிவில் மட்டும் அமைந்து விடக் கூடாது. முதலீட்டுத் தொகை மற்றும் நிதி சார்ந்து இருக்கும் இலக்கு ஆகியவற்றைப் பொறுத்து தான் தங்க முதலீடு அமைய வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் முதலீடு குறித்து ஆலோசனை வழங்கும் வல்லுநர்கள். இது குறித்து 5nance.com நிறுவனர் தினேஷ் ரோகிரா, `சர்வதேச அரசியல் சூழல் மற்றும் உள்ளூர் சந்தையில் ஏற்படும் எதிர்பாராத மாற்றங்களை வைத்துப் பார்த்தால், தங்கத்தில் முதலீடு செய்வது தான் சரி. ஒரு பெரிய முதலீட்டு நிதி இருக்கிறதென்றால், அதில் 10 முதல் 15 சதவிகித பணம் தங்கத்தில் முதலீடு செய்ய ஒதுக்கப்பட வேண்டும். முதலீட்டு நிதி சிறியதாக இருந்தால் இந்த ஒதுக்கீடும் சிறியதாக இருக்க வேண்டும்' என்று கூறினார். 



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.



Get the latest election news, live updates and election schedule for Lok Sabha Elections 2019 on ndtv.com/elections. Like us on Facebook or follow us on Twitter and Instagram for updates from each of the 543 parliamentary seats for the 2019 Indian general elections.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top