Profit

இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு தொடர்கிறது

ரூபாய் vs டாலர்: இறக்குமதியாளரிடம் டாலருக்கு அதிக தேவை இருப்பதால் இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்திய ரூபாய் மதிப்பின் சரிவு தொடர்கிறது

வெள்ளியன்று டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 26 காசுகள் உயர்ந்து ரூ. 71.76 ஆக இருந்தது

வெள்ளிக்கிழமையன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.76 ஆக இருந்தது. இந்த நிலையில் திங்களன்று மேலும் வீழ்ச்சியடைந்து 72.32 ஆக உள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது. இதற்கு இறக்குமதியாளர்களிடம் அமெரிக்க டாலருக்கான தேவை அதிகம் இருப்பதே முக்கிய காரணம் என்று பி.டி.ஐ. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. முந்தைய தினம் 71.73 ஆக நிறைவுபெற்ற இந்திய ரூபாயின் மதிப்பு, இன்று 72.15 ஆக தொடங்கியது.

டாலர், ரூபாய் மதிப்பு மாற்றங்கள் தொடர்பான 10 முக்கிய தகவல்கள்

1.   போரெக்ஸ் டீலர்ஸ் அளித்த தகவலின்படி இறக்குமதியாளர்களிடம் டாலருக்கான தேவை, கச்சா எண்ணெய் வீழ்ச்சி உள்ளிட்டவை ரூபாய் மதிப்பை பாதித்துள்ளன.

2.   அமெரிக்க – சீன வர்த்தக பிரச்சனைகள் காரணமாக டாலருக்கு எதிரான இந்தியா உள்ளிட்ட மற்ற நாட்டு நாணயங்களின் மதிப்பு நெருக்கடியை சந்திக்கின்றன.

3.   கடந்த வெள்ளிக்கிழமையை போல் அல்லாமல் போரெக்ஸ் மார்க்கெட்டில் குறைந்த அளவு டாலரையே ரிசர்வ் வங்கி வழங்குவதாக டீலர்கள் தெரிவிக்கின்றனர்.

4.   கச்சா எண்ணெய் விலையில் மாற்றம், ரூபாய் மதிப்பில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி உள்ளிட்டவை காரணமாக 10 ஆண்டு பத்திரம் அதிக வருமானம் பெற்றுள்ளது.

5.    2014 நவம்பர் 28-ம் தேதி உச்சம் பெற்றதை விட 10 ஆண்டு பத்திரத்தின் வருமானம் 8.12 சதவீதமாக தற்போது அதிகரித்துள்ளது. வெள்ளியன்று இதன் வருமானம் 8.03 ஆக இருந்தது.

6.   வெள்ளியன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 26 காசுகள் அதிகரித்து 71.76 ஆக இருந்தது. அதற்கு முன்பு 7 நாட்களாக இந்திய ரூபாய் மதிப்பு குறைந்தே காணப்பட்டது.

7.   அந்நிய செலவாணி சந்தையில் ரிசர்வ் வங்கியின் தலையீடு அதிகளவில் இருந்ததாகவும், இது ரூபாயின் சரிவை மீட்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றும் ராய்ட்டர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

8.   மும்பை பங்குச் சந்தை தொடக்கத்தின்போது 171.79 புள்ளிகள் சரிந்து 38,218.03 ஆக உள்ளது. தேசிய பங்குச் சந்தை நிப்டி 49.35 புள்ளிகள் (043 சதவீதம்) சரிந்து 11,539.75 ஆக உள்ளது.

9.   சீனாவுடனான வர்த்தகத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எழுப்பிவரும் பிரச்னைகளால் ஆசிய பங்குச் சந்தையும் தொடர்ந்து 8-வது நாளாக வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

10. புதிய ஆயில் உற்பத்திக்கான பணியை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளதால். கமாடிட்டி சந்தையில் ஆயில் விலை அதிகரித்துள்ளது. ஈரானின் ஆயில் ஏற்றுமதிக்கு எதிராக அமெரிக்க விதித்திருக்கும் பொருளாதார தடைகளும் கச்சா எண்ணெய் சந்தை நெருக்கடிகளுக்கு ஓர் காரணம்.



வர்த்தக உலகத்தில் நடக்கும் மாற்றங்கள், பங்குச்சந்தை பரிவர்த்தனைகள் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தமிழில் பெற பேஸ்புக் மற்றும் ட்விட்டர் NDTV Tamilஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

பிற மொழிக்கு | Read In

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top