29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்து வரும் நிலையில், சந்தையில் அந்த நெருக்கடியைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தைக் கைப்பற்றச் சவுதி திட்டமிட்டுள்ளது.

29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை கடும் சரிவு!

ரஷ்ய நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சவூதி தீவிரம் காட்டி வருகிறது.

ஹைலைட்ஸ்

  • 29 ஆண்டுகளில் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை சரிவு
  • ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்க சவூதி திட்டம்
  • கச்சா எண்ணெய் விலை 31.5 சதவீதம் குறைந்துள்ளது.
Tokyo:

ரஷ்ய நாட்டுடன் ஒரு விலை போரை துவங்கும் வகையில், சவூதி அரேபியா கச்சா எண்ணெய் விற்பனை விலையை இன்று மிகவும் குறைத்து அறிவித்துள்ளது. இதனால், கடந்த 1991ஆம் ஆண்டுக்குப் பின்னர் எப்போதும் இல்லாத அளவு கச்சா எண்ணெய் விலை தற்போது கடும் சரிவைச் சந்தித்துள்ளது. 

ஏற்கனவே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பெட்ரோல், டீசல் தேவை குறைந்து வரும் நிலையில், சந்தையில் அந்த நெருக்கடியைச் சமாளிக்க உற்பத்தியை அதிகரித்து வர்த்தகத்தைக் கைப்பற்றச் சவுதி திட்டமிட்டுள்ளது. 

பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலையானது 14.25 டாலர் அல்லது 31.5 சதவீதம் குறைந்து ஒரு பீப்பாய் 31.02 டாலராக உள்ளது. இது கடந்த ஜன.17, 1991 ஆம் ஆண்டு முதல் வளைகுடாப் போர் தொடங்கிய சமயத்துக்குப் பின்னர் ஏற்படும் மிகப்பெரிய அளவிலான விலை வீழ்ச்சியாகும். மிகக் குறைந்த பட்சமாகக் கடந்த பிப்.12 2016ம் ஆண்டில் 35.75 டாலருக்கு வர்த்தகம் செய்யப்பட்டது. 

அமெரிக்காவின் மேற்கு டெக்சாஸில் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் 11.28 டாலராக, அல்லது 27.4% குறைந்து, தற்போது பீப்பாய் 30 டாலராக வர்த்தகம் செய்யப்படுகிறது. 

உலகின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடான சவுதி அரேபியா, உலகின் இரண்டாவது பெரிய உற்பத்தியாளரான ரஷ்ய நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் அமைப்பான (OPEC) உற்பத்தி அதிகரிப்பு குறித்து முன்மொழிந்துள்ளது. 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியைச் சீர்படுத்தும் வகையில், OPEC மற்றும் பிற தயாரிப்பாளர்கள் இந்த விலை குறைப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

OPEC மற்றும் ரஷ்யா இடையேயான தற்போதைய விநியோக ஒப்பந்தம் வரும் மார்ச் மாத இறுதியில் முடிவடைகிறது. இதன் பின்னர் ஏப்ரல் மாதத்திலிருந்து ஒரு நாளைக்கு 10 மில்லியன் பீப்பாய்களுக்கு மேல் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்கச் சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது என இரு தரப்பு வட்டாரங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு உறுதி அளித்துள்ளது. 

கடைசியாகக் கடந்த 2014 மற்றும் 2016ஆம் ஆண்டுக்கு இடையில் சவூதி அரேபியா, ரஷ்யா மற்றும் பிற முக்கிய உற்பத்தியாளர்கள் இதுபோன்ற சந்தை பங்கீட்டிற்காகவும், அமெரிக்காவிலிருந்து உற்பத்தியைக் குறைக்கவும் முயற்சித்தன. 

தற்போது உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தியாளரான ஷேல் நிறுவனம், வயல்களுக்கு அடியிலிருந்து எண்ணெய் எடுப்பதால், கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் நாட்டின் உற்பத்தி இரட்டிப்பாகியுள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)