This Article is From May 13, 2020

சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடியில் கடனுதவி! 45 லட்சம் நிறுவனங்களுக்கு பலன்

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம். 

சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடியில் கடனுதவி! 45 லட்சம் நிறுவனங்களுக்கு பலன்

மத்திய அரசின் சிறப்பு திட்டத்திற்கு தன்னிறைவு இந்தியா என பெயரிடப்பட்டுள்ளது.

சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்படும் என்றும், இதனால் 45 லட்சம் நிறுவனங்கள் பலன் அடையும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டிருக்கும் பொருளாதார பின்னடைவை சரி செய்வதற்காக ரூ. 20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அறிவிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில் திட்டம் குறித்த விவரங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். 

பொருளாதார சிறப்புத் திட்டங்கள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது-

சிறப்புத் திட்டமான 'ஆத்ம நிர்பார் பாரத் திட்டத்திற்கு' தமிழில் தன்னிறைவு இந்தியா என்று பொருள்படும். இந்தப் பெயரில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாம் நாடு தற்சார்பு உடையதாக மாற வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டங்கள் வடிமைக்கப்பட்டுள்ளன.

மின் உற்பத்தி துறையில் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பிலும் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. பொருளாதாரத்தை வலிமைப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. 

சிறு குறு தொழில்துறைக்கு ரூ. 3 லட்சம் கோடி மதிப்பில் கடன் உதவி வழங்கப்படும். கடனுதவி திட்டம் அக்டோபர் 31-ம்தேதி வரை செயல்படுத்தப்படும். வட்டிக்கு ஓராண்டு கால அவகாசம்அளிக்கப்பட்டுள்ளது. இந்த கடனுக்கு பிணை தேவையில்லை. இதனால் 45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெறும். 

ரூ. 100 கோடி வியாபாரம் உள்ள சிறு தொழில்களுக்கு ரூ. 25 கோடி வரை கடன் இருந்தால் அந்த நிறுவனத்திற்கு கூடுதல் கடன் வழங்கப்படும். 

பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிறு தொழில்துறைக்கு ரூ. 20 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உதவி வழங்கப்படும். ரூ. 2 லட்சம் வரையில் சிறு தொழில் துறையினர் கடன் பெற்றுக் கொள்ளலாம். 

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

.