Profit

Corporate Tax Rate Cut: வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 25.2 ஆக குறைப்பு

Nirmala Sitharaman's announcements: இந்த அறிவிப்புக்கு பிறகு சந்தைகள் உடனடியாக உயர்ந்தன. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது மற்றும் நிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.


New Delhi: 

இந்தியாவின் மந்தமான பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான முயற்சியில் இன்று உள்நாட்டு நிறுவனங்கள் மீதான கார்ப்ரேட் வரியை குறைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். குறிப்பாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில்  அதிக பங்களிப்பு செய்யும் விதமாக இந்த வரி குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு பிறகு சந்தைகள் உடனடியாக உயர்ந்தன. சென்செக்ஸ் 1,600 புள்ளிகளுக்கு மேல்  உயர்ந்தது மற்றும் நிஃப்டி 10,900 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது. 

புதிதாக அக்டோபர் 01, 2019-க்குப் பிறகு தொடங்க இருக்கும் உற்பத்தி நிறுவனங்கள் 15 % மட்டும் வரியாகச் செலுத்த வேண்டி இருக்கும். அனைத்து சர் சார்ஜ்கள் மற்றும் செஸ் போன்றைவகளை எல்லாம் சேர்த்தால் உற்பத்தி நிறுவனங்கள் 17.01 % வரி செலுத்த வேண்டி இருக்கும். புதிய வரி விகிதம் 30 சதவீதத்திலிருந்து 25.2 சதவீதம் குறைக்கப்படும். இதில் அனைத்து கூடுதல் கட்டணங்களும் அடங்கும். இது எந்தவொரு சலுகையும் பெறத நிறுவனங்களுக்கு பொருந்தும். 

புதிய வரி விகிதம் ஏப்ரல் 1, 2019 முதல் நடைமுறைக்கு வருகிறது.  “வளர்ச்சி மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு  2019-20 நிதியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் வருமான வரிச் சட்டத்தில் புதிய ஏற்பாடுகள் சேர்க்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.  

எந்த நிறுவனமும் முன்கூட்டியே வரி செலுத்தப்பட்டாலும் சரி செய்யப்படும் என்று தெரிவித்தார். ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி ஆறு ஆண்டுகளில் குறைந்து 5 சதவீதமாக உள்ளது. தேவை மற்றும் முதலீடுகளை அதிகரிப்பதற்காக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  

உற்பத்தி துறையில் முக்கிய பங்குவகிக்கும் ஆட்டோ மொபைல் துறை பலவகையில் பாதிக்கப்பட்டுள்ளது. கடன் முடக்கம், தேவை குறைவு ஆகிய காரணங்களினால் தற்காலிகமாக உற்பத்தியை நிறுத்திவிட்டனர். சிலர் உற்பத்தியை குறைத்துதுள்ளனர். கார்களுக்கு ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக உள்ளது. இந்த வரி விகிதம் தேவையை குறைத்து விட்டது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 



Follow NDTV for latest election news and live coverage of assembly elections 2019 in Maharashtra and Haryana.
Subscribe to our YouTube channel, like us on Facebook or follow us on Twitter and Instagram for latest news and live news updates.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Top