'ஊரடங்கை சமாளிக்க பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் ஸ்டாக்கில் உள்ளன' : இந்தியன் ஆயில்

ஊரடங்கால் விமானங்கள், ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரிய அளவில் எரிபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வாகனப்போக்குவரத்து குறைந்து விட்டதால் இம்மாத பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும், விமான எரிபொருளின் தேவை 20 சதவீதமும் குறைந்து விட்டது. 

'ஊரடங்கை சமாளிக்க பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் ஸ்டாக்கில் உள்ளன' : இந்தியன் ஆயில்

ஹைலைட்ஸ்

  • ஊரடங்கால் பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் தேவை குறைந்துள்ளது
  • கேஸ் சிலிண்டருக்கான தேவை 2 மடங்காக அதிகரித்துள்ளது
  • போதுமான சிலிண்டர்கள் நிலுவையில் உள்ளதென இந்தியன் ஆயில் நிறுவனம் தகவல்

இந்தியாவில் ஊரடங்கை சமாளிக்கும் வகையில் பெட்ரோல், டீசல், கேஸ் சிலிண்டர்கள் ஸ்டாக்கில் இருப்பதாகவும், பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்றும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

உலகின் 3-வது பெரிய எரிசக்தி நுகர்வோராக இந்தியா இருக்கிறது. தற்போது கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

ஊரடங்கு 21 நாட்களுக்கு அதாவது ஏப்ரல் 14-ம்தேதி வரையில் நடைமுறையில் இருக்கும். அதற்குப் பின்னரும் ஊரடங்கு தொடரும் என தகவல்கள் வெளியாகின. இதனை இன்று மத்திய அரசு மறுத்துள்ளது. 

இதற்கிடையே கேஸ் சிலிண்டர்கள் பற்றாக்குறையின்றி கிடைக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் காணப்பட்டது. இந்த நிலையில் போதுமான அளவுக்கு கேஸ் சிலிண்டர்கள் ஸ்டாக்கில் இருப்பதாக இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ் சிங் தெரிவித்துள்ளார். 

ஊரடங்கால் விமானங்கள், ரயில், பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் பெரிய அளவில் எரிபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. வாகனப்போக்குவரத்து குறைந்து விட்டதால் இம்மாத பெட்ரோல் தேவை 8 சதவீதமும், டீசல் தேவை 16 சதவீதமும், விமான எரிபொருளின் தேவை 20 சதவீதமும் குறைந்து விட்டது. 

அதே நேரத்தில் மக்கள் பெரும்பாலானோர் வீடுகளிலேயே சமைத்து உண்டு வருவதால், கேஸ் சிலிண்டருக்கான தேவை 200 மடங்கு அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன. 

இந்த நிலையில் பற்றாக்குறை குறித்து கவலைப்பட வேண்டாம் என்றும் போதுமான சிலிண்டர்கள் ஸ்டாக்கில் இருப்பதாகவும் இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. (இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)