2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிப்பு: சக்திகாந்த தாஸ்

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று ரிசர்வ் வங்கி ஆளுநர் செய்தியாளர்களை சந்தித்தார்.

2021-22ல் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என கணிப்பு: சக்திகாந்த தாஸ்

2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 1.9% சதவீதமாக இருக்கும்

2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த மார்ச்.25ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த சக்திகாந்த தாஸ், தற்போது இரண்டாவது முறையாக இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 2021-22ம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.4% ஆக இருக்கும் என சர்வதேச நிதியம் கணித்துள்ளது. இதேபோல், 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது, 1.9% சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகளவில் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ள நிலையில் இது கவனிக்கத்தக்க ஒன்று என்று கூறியுள்ளார். 

ஏற்கனவே, 2021-22ம் ஆண்டுகளில் உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒட்டுமொத்த இழப்பானது 9 டிரில்லியன் டாலராக இருக்கும் என மதிப்பிட்டுள்ளது. இது, ஜப்பான் மற்றும் ஜெர்மனியின் ஒருங்கிணைந்த பொருளாதாரத்தை விட அதிகமானதாகும்.