
ஓட்டல் தொழில், ஆட்டோ மொபைல் துறை ஆகியவைதான் கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளாக இருக்கின்றன.
நாட்டில் பல்வேறு துறைகளில் பணிக்கு அமர்த்தப்படுவதுமே மாதத்தை விடவும் ஜூனில் 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் இருந்து ஊரடங்கு உததரவு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கடந்த மாதம் ஊரடங்கு தளர்வு 1.0 என்ற பெயரில் மத்திய அரசு கட்டுப்பாடு தளர்வுகளை கொண்டு வந்தது.
குறிப்பாக மே மாதத்தின்போது வேலையிழப்பு நாட்டில் மிக அதிகமாக இருந்து வந்தது. தளர்வுகளால், அதன்பின்னர் ஜூன் மாதத்தில் வேலை வாய்ப்பு 33 சதவீதம் அதிகரித்துள்ளதாக பிரபல வேலைவாய்ப்பு தகவல் நிறுவனமான நாக்ரி.காம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ஜூன் மாதத்தில் 44 சதவீதம் அளவுக்கு வேலை வாய்ப்புகள் குறைந்துள்ளன. கடந்த மேயுடன் ஒப்பிடும்போது வேலைவாய்ப்பு ஜூனில் 33 சதவீதம் அதிகரித்துள்ளது.
அக்கவுன்ட்டிங், பிபிஓ, ஐ.டி. நிறுவனங்கள், ஐ.டி. ஹார்டுவேர், சாஃப்ட்வேர் நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் ஆசிரியர் பணி, மருந்து, பயோடெக்னாலஜி, வர்த்தகம், விற்பனை ஆகிய துறைகளில் வேலை வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளன.
ஓட்டல் தொழில், ஆட்டோ மொபைல் துறை ஆகியவைதான் கொரோனாவால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட துறைகளாக இருக்கின்றன.
முன்னதாக பொருளாதார ஆய்வு நிறுவனமான இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம், நாட்டில் வேலை வாய்ப்புகள் அதிகரிப்பதற்கான சூழல் இருப்பதாக தகவல் ஒன்றை வெளியிட்டிருந்தது.
மே மாதத்தில் 23.5 சதவீதமாக இருக்கும் வேலைவாய்ப்பின்மை, ஜூனில் 11 சதவீதம் என்று அந்த அமைப்பு கூறியது.
ஜூன் மாதத்தை பொறுத்தளவில் வேலை வாய்ப்பின்மை நகர்ப்புறங்களில் 12 சதவீதமாகவும், கிராமங்களில் 10.5 சதவீதமாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சுமார் 46 கோடிப்பேர் வேலையை எதிர்பார்த்திருந்தனர். அவர்களில் 37.3 கோடிப்பேருக்கு ஜூனில்வேலை கிடைத்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.