கொரோனா அச்சுறுத்தல் : வர்த்தகத்துறைக்கு நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!!

நாடு முழுவதும் 30 மாநிலங்கள் முழுவதுமாக முடக்கப்பட்டுள்ளது. இதனால் வர்த்தக துறையினர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் நிதியமைச்சர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் : வர்த்தகத்துறைக்கு நிதியமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!!

ஹைலைட்ஸ்

  • கொரோனாவால் வர்த்தகத்துறை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது
  • வர்த்தகத்துறையின் இழப்பை சரி செய்ய நிதியமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார்
  • வருமான வரித்தாக்கல் செய்வது ஜூன் 30-ம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏராளமானோர் உயிரிழந்து வரும் நிலையில், இந்தியாவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 500-யை எட்டியுள்ளது. கொரோனாவால் அனைத்து துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வர்த்தகம் முடங்கியதால் சிறு குறு வியாபாரிகள் முதல் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் வரையில் இழப்பைச் சந்திக்கின்றன. 

வர்த்தக துறையின் பாதிப்புகளைச் சரி செய்யும் விதமாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான குழுவினர், அரசால் செய்ய இயலும் அதிகபட்ச நடவடிக்கைகள் குறித்து, ஆய்வு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பல முக்கிய அறிவிப்புகளை நிதியமைச்சர் வெளியிட்டார். அவற்றைப் பார்க்கலாம்...

1. நிதியாண்டு 2018 - 19-க்கான வருமான வரி தாக்கல் ஜூன் 30, 2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

2. தாமதமாக பணம் செலுத்துவதற்கு வசூலிக்கப்பட்டு வந்த வட்டி 12-ல் இருந்து 9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 

3. ஆதார் எண்ணை - பான் எண்ணுடன் இணைக்கும் தேதி மார்ச் 31-ல் இருந்து ஜூன் 30-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது. 

4. வரி பிரச்சினை தீர்மான திட்டமான விவாத் சே விஷ்வாஸ், ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

5. விவாத் சே விஷ்வாஸ் திட்டத்திற்கு முதல்கட்ட தொகையான 10 சதவீத வட்டி கட்டத் தேவையில்லை.

6. வருமான வரித்துறையின் கீழ் அனுப்பப்படும் பல்வேறு நோட்டீஸ்களுக்கு பதில் அளிக்க காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

7. வருமான வரி ரிட்டர்ன் தாமாகச் செலுத்துவதற்கு கட்டப்படும் வட்டி குறைக்கப்பட்டுள்ளது. 

8. மார்ச், ஏப்ரல், மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி. ரிட்டர்ன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

9. ரூ. 5 கோடி வரை டர்ன் ஓவர் ஆகும் நிறுவனங்கள் தாமதமாக வருமான வரி தாக்கல் செய்தால் அந்த நிறுவனத்திற்கு வட்டி, அபராதம், தாமத கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படாது. 

10. கட்டாயமாகக் கூட வேண்டிய நிறுவன நிர்வாக கூட்டங்கள் அடுத்த 2 காலாண்டுக்குக் கூடத்தேவையில்லை.

11. 2019 - 20-ல் போர்டு மீட்டிங் நடைபெறவே இல்லையென்றாலும், அது விதி மீறலாக கருதப்படாது.

12. அடுத்த மூன்று மாதங்களுக்கு டெபிட் கார்டு வைத்திருப்பவர்கள் எந்த வங்கி ஏ.டி.எம்.களிலும் பணம் எடுத்துக் கொள்ள சேவைக் கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது. 

Listen to the latest songs, only on JioSaavn.com