கொரோனா பாதிப்பு: ஊதிய குறைப்பை அறிவிக்கின்றது இண்டிகோ

"வருவாயின் வீழ்ச்சியுடன், விமானத் துறையின் உயிர்வாழ்வு இப்போது ஆபத்தில் உள்ளது" என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார்

கொரோனா பாதிப்பு: ஊதிய குறைப்பை அறிவிக்கின்றது இண்டிகோ
New Delhi:

இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி  ரோனோஜோய் தத்தா,  இன்று விமான நிறுவனம் மூத்த ஊழியர்களுக்கான ஊதிய குறைப்பு அமல்படுத்தப்படுவதாகக் கூறினார். வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை வணிகத்தில் மதிப்பிடும் நேரத்தில் ஊதிய குறைப்பு குறித்த அறிவிப்பு வந்துள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 18 புதிய தொற்று நோய் பாதிப்பாளர்களுக்குப் பிறகு, இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளர்களின் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளதாகச் சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்திருந்தது. கொரோனா வைரஸ் பரவல் விமானத் துறையைக் கடுமையாகத் தாக்கியுள்ள நிலையில், தானாகவே 25 சதவீத ஊதிய குறைப்பு எடுத்துக்கொள்வதாக விமான நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

"வருவாயின் வீழ்ச்சியுடன், விமானத் துறையின் உயிர்வாழ்வு இப்போது ஆபத்தில் உள்ளது" என்று இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சலில் தெரிவித்தார். "நாங்கள் பணமில்லாமல் இருக்க எங்கள் பணப்புழக்கத்தில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும்."

"மிகுந்த தயக்கத்துடனும், ஆழ்ந்த வருத்தத்துடனும், 2020 ஏப்ரல் 1 முதல் பேண்ட்ஸ் ஏ மற்றும் பி தவிர்த்து அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய குறைப்புக்களை ஏற்படுத்துகிறோம்" என்று திரு தத்தா கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

ஏ மற்றும் பி ஆகிய இரண்டு வகுப்பில் மிகக் குறைந்த சம்பள ஊழியர்களே உள்ளனர்.ஆனால், இதில் பெரும்பாலான விமான ஊழியர்கள் உள்ளனர்.

"நான் தனிப்பட்ட முறையில் 25 சதவீத ஊதிய குறைப்பை எடுத்து வருகிறேன், எஸ்விபிக்கள் (மூத்த துணைத் தலைவர்கள்) மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் 20 சதவீதத்தை எடுத்துக்கொள்கிறார்கள், விபிக்கள் (துணைத் தலைவர்கள்) மற்றும் காக்பிட் குழுவினர் 15 சதவீத ஊதிய குறைப்பை எடுத்து வருகின்றனர், ஏவிபிக்கள் (உதவி துணைத் தலைவர்கள்), கேபின் குழுவினருடன் பேண்ட்ஸ் டி 10 சதவீதமும் பேண்ட் சிஎஸ் ஐந்து சதவீதமும் எடுக்கும் ”என்று திரு தத்தா குறிப்பிட்டுள்ளார்.

இண்டிகோ தலைமை நிர்வாக அதிகாரி, "டேக்-ஹோம், மற்றும்  சம்பளத்தை" குறைப்பது எவ்வளவு கடினம் என்று தனக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com