This Article is From Jul 13, 2020

பொருளாதாரத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது; ரிசர்வ் வங்கி ஆளுநர்!

"கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் 7 வது எஸ்பிஐ வங்கி மற்றும் பொருளாதார மாநாட்டில் சிறப்புரையாற்றினார்

ஹைலைட்ஸ்

  • சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பினை பாதித்துள்ளது
  • நமது பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் வலுவான தன்மையை கொரோனா சோதிக்கின்றது
  • பொருளாதார வளர்ச்சியே ரிசர்வ் வங்கியின் "முன்னுரிமை"

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 8 லட்சத்தினை கடந்துள்ள நிலையில், “கொரோனா தொற்றானது, சுகாதாரம், பொருளாதாரம், மக்களின் நல்வாழ்வு, வேலை வாய்ப்பு போன்றவற்றில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத தாக்கத்தினையும் எதிர்மறையான மாற்றத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.” என, எஸ்பிஐ வங்கியின் 7வது பொருளாதார மாநாட்டில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.

"கொரோனா பாதிப்பு, தற்போதுள்ள உலக ஒழுங்கு, உலகளாவிய மதிப்பு சங்கிலிகள், உலகெங்கிலும் உள்ள தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்கள், மற்றும் உலக மக்கள்தொகையில் பெரும் பகுதியினரின் சமூக பொருளாதார நிலைமைகளில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளன." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றானது நமது பொருளாதார மற்றும் நிதி அமைப்பின் வலுவான தன்மையை சோதிப்பதாக உள்ளது.

பொருளாதார வளர்ச்சியே ரிசர்வ் வங்கியின் "முன்னுரிமை" என்றும், "நிதி ஸ்திரத்தன்மையின் அம்சத்திற்கு சம முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும்" என்றும் தாஸ் கூறியுள்ளார்.

COVID-19 இன் பொருளாதார தாக்கத்திற்கு எதிரான நாட்டின் எதிர் நடவடிக்கைகளில் வங்கிகளும் பிற நிதி நிறுவனங்களும் இன்று முன்னணியில் உள்ளன. என்றும் தாஸ் குறிப்பிட்டுள்ளார். மேலும்,

இந்திய ரிசர்வ் வங்கி "நமது நிதி அமைப்பைப் பாதுகாப்பதற்கும் தற்போதைய நெருக்கடியில் உண்மையான பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் பல முக்கியமான வரலாற்று நடவடிக்கைகளை எடுத்துள்ளது" என்றும் “சந்தை நம்பிக்கையை அதிகரிப்பதற்கும் பணப்புழக்க அழுத்தத்தை எளிதாக்குவதற்கும் ரிசர்வ் வங்கி வழக்கமான மற்றும் வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.” என்றும் தாஸ் கூறியுள்ளார்.

.