மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு!

கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு.

மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு!

ஹைலைட்ஸ்

  • மருத்துவர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் காப்பீடு
  • இதன் மூலம் 20 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்
  • கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பவர்களுக்கு மத்திய அரசு மருத்துவ காப்பீடு

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,பொருளாதார தாக்கத்தைச் சீர்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட 36 மணி நேரத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளோம். 

ஏழைகள், தொழிலாளர்களுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. யாரும் பட்டினியால் வாடக்கூடாது என்பதற்காக பல்வேறு பொருளாதார திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பில் சில முக்கியம்சங்கள்:

உடனடி உதவி தேவைப்படும் ஏழைகளுக்கு ஒரு தொகுப்பு தயாராக உள்ளது. 

இந்த தொகுப்பு மதிப்பு ரூ .1.70 லட்சம் கோடியாகும். 

கொரோனாவுக்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்களுக்கு ரூ.50 லட்சத்தில் மருத்துவ காப்பீடு. இதன் மூலம் 20 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்

பிரதமரின் கரிப் கல்யாண் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 80 கோடி மக்கள் பயனடைய உள்ளனர்.

தற்போதுள்ள ஒதுக்கீட்டிற்குக் கூடுதலாக, அடுத்த மூன்று மாதங்களில் அவர்களுக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை கிடைக்கும்; ஒரு ஏழை கூட உணவு இல்லாமல் விடப்பட மாட்டார்கள். 

ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரிபவர்களுக்கு ரூ.182ல் இருந்து ரூ.202 ஆக ஊதிய உயர்வு; இதன் மூலம் 5 கோடி மக்கள் பயனடைவார்கள், 

விவசாயிகளுக்கு கிசான் யோஜனா திட்டத்தின் கீழ் உடனடியாக 2000 ரூபாய் வழங்கப்படும். இதன் மூலம் 8.69 கோடி விவசாயிகள் இதன் மூலம் நேரடியாக பயன்பெறுவர்.

முறைசாரா தொழிலாளர்களுக்கு, 2 ஆயிரம் ரூபாய் கூடுதலாக வழங்கப்படும். இதன் மூலம் 5 கோடி குடும்பங்கள் நேரடியாக பயன்பெறுவர்

உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 3 மாதங்களுக்கு இலவசமாக சிலிண்டர் வழங்கப்படும்.

20 கோடி பெண்களுக்கு ஜன்தன் கணக்கின் கீழ், மாதம் தோறும் 500 ரூபாய் என அடுத்த 3 மாதங்களுக்கு வழங்கப்படும்