மே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48 சதவிகிதமாகும்!: சிஎம்ஐஇ தகவல்!!

மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 23.48 சதவிகித மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தெரிவித்துள்ளது.

மே மாதத்தில் வேலையின்மை அளவு 23.48 சதவிகிதமாகும்!: சிஎம்ஐஇ தகவல்!!

வேலையின்மை குறித்த தரவு பொருளாதார நடவடிக்கைகளில் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தை பிரதிபலிக்கிறது

New Delhi:

கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்தியாவில் முழு முடக்க உத்தரவானது கடந்த மார்ச் மாதம் தொடங்கி மே 31 வரை நீடித்தது. பின்னர் அன்லாக் இந்தியா என்று மீண்டும் இம்மாதம் 30 வரை முழு முடக்க நடவடிக்கையானது பல தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளில் ஒரு பகுதியாக விமான மற்றும் ரயில் சேவைகளும், மாநிலங்களுக்கிடையேயான போக்குவரத்துக்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மே மாதத்தில் மட்டும் நாடு முழுவதும் 23.48 சதவிகித மக்கள் வேலையிழந்துள்ளதாக இந்திய பொருளாதாரத்தை கண்காணிக்கும் மையம் (CMIE) சமீபத்தில் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் இது 23.52 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது நாடு முழுவதும் 1,90,535 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5,394 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் உள்நாட்டு கட்டமைப்பானது, தொழில் துறையில் ஆண்டுதோறும் 40 சதவிகித வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது ஏப்ரல் நிலவரப்படி 38.1 சதவிகிதமாக தொழில்துறை வளர்ச்சி குறைந்துள்ளது.